Hijab Issue: பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றது' - இந்தியா கடும்கண்டனம்!

author img

By

Published : Feb 11, 2022, 7:47 AM IST

இந்தியா கடும் கண்டனம்
இந்தியா கடும் கண்டனம் ()

Hijab Issue: கர்நாடகத்தில் நடந்துவரும் ஹிஜாப் பிரச்னைக் குறித்த பாகிஸ்தானின் கண்டனத்திற்கு இந்தியா கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டெல்லி: Hijab Issue: கர்நாடக மாநிலத்தில் ஆரம்பித்த ஹிஜாப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து நாடெங்கும் பரவி வருகிறது.

மதச்சார்பற்ற நாடாக சர்வதேச அளவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்தியா பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன்பொருட்டு இந்தியாவின் மீது ஏனைய உலக நாடுகளும், பலதரப்பட்ட மக்களும் வேற்றுமைகளிலும் ஒற்றுமையுடன் வாழும் வெற்றிக் கண்ட நாடாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டிவருகின்றன.

அவ்வப்போது, அதனை சற்று அசைத்துப் பார்க்கும்விதமாக சில செயல்பாடுகளை நம் நாடு சந்தித்து வருகின்றது.

ஹிஜாப் சர்சை

கர்நாடக மாநிலத்தின், உடுப்பியில் உள்ள பெண்கள் அரசு முன் கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி), 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஹிஜாப் தொடர்பான சர்ச்சை வெடித்தது. இந்தப் பிரச்னை சர்வதேச அளவில் கவனத்தையும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

பாகிஸ்தான் கண்டனம்

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட 'ஹிஜாப் விவகாரம்' தொடர்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகப் பொறுப்பாளர்களுக்கு அந்நாட்டு அரசு (பிப்.9) சம்மன் அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அதில், 'இஸ்லாமிய மாணவர்களுக்கு ஹிஜாப் அணியத் தடை செய்தது, மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்' என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இதற்கு பாகிஸ்தான் "கடுமையான கவலையையும் கண்டனத்தையும்" தெரிவித்ததாகவும் செய்தி வெளியானது.

மேலும் இது தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், "அங்கு ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியால் வழிநடத்தப்பட்டு வரும் ஹிஜாப் எதிர்ப்பு பரப்புரையின் மீது, பாகிஸ்தானின் தீவிர அக்கறையை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவியுங்கள். அத்துடன் இஸ்லாமியப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்தியாவின் கடுமையான பதிலடி

கர்நாடக ஹிஜாப் சர்ச்சையில் பாகிஸ்தானின் கூற்றுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்லாமாபாத்தின் வெளியுறவு அமைச்சகத்திற்கு புதன்கிழமை (பிப்.9) சென்ற இந்தியாவின் தூதரகப் பொறுப்பாளர் சுரேஷ் குமார், அந்த நாட்டின் கூற்றுக்கள் "ஆதாரமற்றன" என்று கூறினார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தலையிட முயற்சித்துள்ளது. ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் கூற்று அடிப்படையற்றது என்று கூறிய இந்தியத் தூதர், செயல்முறைகள் உள்ளன என்றும், அவர்களின் சாதனைப் பதிவைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தனது ட்விட்டர் பதிவில், "இஸ்லாமியப் பெண்களின் கல்வியைப் பறிப்பது ஒரு அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்; அதை செய்வதும், ஹிஜாப் அணிந்ததற்காக அவர்களை பயமுறுத்துவதும் ஒரு அடக்குமுறையே ஆகும்" என்று முன்னதாகப் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.