ETV Bharat / bharat

Neeraj Chopra: "தங்க மகன்" நீரஜ் சோப்ரா... கடந்து வந்த பாதை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 1:19 PM IST

Updated : Aug 28, 2023, 3:01 PM IST

நீரஜ் சோப்ரா
Neeraj Chopra

ஒலிம்பிக் போட்யில் தங்கம் வென்றிருந்தாலும், இதுவரை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதில்லை, என்ற குறையை தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று நிவர்த்தி செய்து உள்ளார் நீரஜ் சோப்ரா.

ஹைதராபாத்: ஹரியான மாநிலத்தின் பானிபட் நகரில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. அவர் அங்குள்ள பிவிஎன் பள்ளியிலும், சண்டிகரிலுள்ள தயானந்த் ஆங்கிலோ - வேதிக் கல்லுரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஈட்டி எறிதல் மீது ஆர்வம் கொண்ட நீரஜ் சோப்ரா, தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் அசத்தியதன் மூலம், இந்திய ராணுவத்தில் சுபேதார் பணியிடம் கிடைத்தது.

மேலும், இளையோருக்கான உலக தடகளப் போட்டிகளில் வெற்றியை பெற்ற முதலாவது வீரர் மற்றும் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா தன் வசம் வைத்து உள்ளார். 2016ஆம் ஆண்டு 20 வயதிற்கு உட்பட்டோர்க்கான உலக போட்டி ஈட்டி எறிதலில் 86 புள்ளி 48 மீட்டர் தொலைவுக்கு எறிந்து உலக சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து 2017ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2018ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம், தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் என பதக்கங்களை வென்று குவித்தார். 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 87 புள்ளி 58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டிய எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் மற்றும் தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த முதல் வீரர் என்ற பல பெருமைகளை நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க: Neeraj Chopra: "தங்கம் வென்றது நாட்டிற்கு பெருமையான தருணம்" - நீரஜின் தந்தை சொல்கிறார்!

2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் யூஜின் நகரத்தில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் பங்கேற்று 88 புள்ளி 13 மீட்டர் தொடலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டிகளில் பதக்கததை வென்ற இரண்டாவது இந்திய வீரர் என நீரஜ் சோப்ரா அழைக்கப்பட்டார்.

முன்னதாக 2003ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலப் பதக்கததை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அதே ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். இந்நிலையில், தற்போது ஹங்கேரி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் 88 புள்ளி 17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கததை வென்று 40 ஆண்டு கால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்து அசத்தி உள்ளார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அவர் இப்போது உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று, இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை படைத்துள்ளார். இதுவரை உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதில்லை என்ற குறையை தற்போது நீரஜ் சோப்ரா போக்கி உள்ளார் என்றே கூற வேண்டும்.

மேலும், இவர் தகுதி சுற்றில் 88 புள்ளி 77 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்ததன் மூலம் அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளார். அதிலும் சாதனை படைப்பார் என ரசிகர்களும், ஆர்வலர்களும் எதிர்பார்கின்றனர்.

இதையும் படிங்க: Neeraj Chopra : இந்த பதக்கம் இந்தியாவுக்கானது.... வரலாற்று நாயகன் நீரஜ் சோப்ரா!

Last Updated :Aug 28, 2023, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.