ETV Bharat / bharat

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி

author img

By

Published : Oct 8, 2021, 11:15 AM IST

Updated : Oct 8, 2021, 11:28 AM IST

தனி விமானங்கள் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்தும், வழக்கமான விமானங்கள் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் 15ஆம் தேதியிலிருந்தும் சுற்றுலா விசா (நுழைவு அனுமதி) வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

India to allow foreign tourists travelling by chartered flights from Oct 15
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: இது தொடர்பாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா அளிப்பது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும், பன்னாட்டுப் பயணிகளின் வருகைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது, வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்குப் புதிய விசாக்களை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, தனி விமானங்களில் வருவோருக்கு வரும் 15ஆம் தேதி முதலும், வழக்கமான விமானங்களில் வருவோருக்கு நவம்பர் 15ஆம் தேதி முதலும் விசா அனுமதி வழங்கப்படும்.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாப் பயணிகளும், விமான ஊழியர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய விமானப்படை நாள்: பிரதமர், அமைச்சர் ராஜ்நாத் வாழ்த்து

Last Updated :Oct 8, 2021, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.