ETV Bharat / bharat

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு... மத்திய ஆசியாவில் இந்தியாவின் திட்டம் என்ன?

author img

By

Published : Jul 2, 2023, 8:13 PM IST

ஜூலை 4ஆம் தேதி இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்தழைப்பு மாநாடு நடைபெறுகிறது. மத்திய ஆசிய நாடுகளில் வர்த்தகம் மேம்பாட்டை விரும்பும் இந்தியா அதுகுறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCO Summit
SCO Summit

டெல்லி : நடப்பாண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரங்களை அணுகுவது தொடர்பாக இந்தியாவின் முன்னுரிமை குறித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஷாங்காய் நகரில் நடந்த பொருளாதார மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஜூலை 4ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாக அழைக்கப்பட்டு உள்ளன.

மேலும் துர்க்மெனிஸ்தானையும் சிறப்பு விருந்தினராக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. மேலும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டுக்கான உச்சி மாநாடு ‘Towards a SECURE SCO’ என்ற பாதுகாப்பை நோக்கி கருப்பொருளை கொண்டு நடைபெறுகிறது. இதில் SECURE என்ற வார்த்தை பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், இணைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை, மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவைகளை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய ஆசிய நாடுகளில் பொருளாதர வர்த்தகத்தை மேம்படுத்து இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே வர்த்தகத்தை பெருமளவில் உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தான் உடனான இணக்கமற்ற சூழல் மற்றும் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரங்கள் இந்த வர்த்தக போக்குவரத்து இணைப்பு இடையூறாக இருக்கும் என இந்தியா கருதுவதாக கூறப்படுகிறது.

மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள நிலையில், எண்ணெய், எரிவாயு மற்றும் யுரேனியம் உள்ளிட்ட பிராந்தியத்தின் வளமான ஆற்றல் வளங்கள் காரணமாக இந்த வர்த்தகம் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக நடப்பாண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிதான் நிலவரம் குறித்து இந்தியா பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சர்வதேச வட - தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2000ஆம் செப்டம்பர் மாதம் இந்தியா கையெழுத்திட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உடனான சுமூக உறவுகள் மூலம் மத்திய ஆசிய நாடுகளில் வர்த்தகம் சார்ந்த அணுகள்கள் இந்தியாவிற்கு வசமாக என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர அவ்ஹாத் நியமனம்... தலைமை கொறடா யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.