ETV Bharat / bharat

இந்தியாவில் 5,921 பேருக்கு கரோனா, 289 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Mar 5, 2022, 10:49 AM IST

india-logs-5921-new-covid-19-cases-289-deaths
india-logs-5921-new-covid-19-cases-289-deaths

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் 63 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 878ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 178 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 60 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கரோனா கடந்துவந்த பாதை

  • ஆகஸ்ட் 2020 - 20 லட்சம்
  • செப்டம்பர் 2020 - 40 லட்சம்
  • செப்டம்பர் 2020 - 50 லட்சம்
  • செப்டம்பர் 2020 - 60 லட்சம்
  • அக்டோபர் 2020 - 70 லட்சம்
  • நவம்பர் 2020 - 90 லட்சம்
  • டிசம்பர் 2020 - 1 கோடி
  • மே 2021 - 2 கோடி
  • ஜூன் 2021 - 3 கோடி
  • மார்ச் 2022 - 4 கோடி

இதையும் படிங்க: இந்தியாவில் ஆறாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.