ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் 43,000 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Jul 29, 2021, 10:47 AM IST

covid tracker  india covid cases  coronavirus in india  statewise covid count  statewise covid data  india count  corona india count  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா பாதிப்பு  இந்திய கரோனா எண்ணிக்கை  கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை
கரோனா எண்ணிக்கை

இந்தியாவில் நேற்று (ஜூலை 28) ஒரே நாளில் 38 ஆயிரத்து 465 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 509 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 114 ஆக உள்ளது.

மேலும் 38 ஆயிரத்து 465 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து ஆயிரத்து 612 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 640 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 45 கோடியே 07 லட்சத்து 06 ஆயிரத்து 257 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 28 வரை மொத்தம் 46 கோடியே 26 லட்சத்து 29 ஆயிரத்து 773 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (ஜூலை 28) ஒரே நாளில் 17 லட்சத்து 28 ஆயிரத்து 795 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா வெள்ளம்: உதவ முன்வந்த அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.