ETV Bharat / bharat

இந்தியா ஒன்றும் குடிபெயரும் மக்களுக்கான தலைநகர் அல்ல - மத்திய அரசு

author img

By

Published : Mar 26, 2021, 8:04 PM IST

உலகின் குடிபெயரும் மக்கள் அனைவருக்கும் இந்தியா ஒன்றும் தலைநகராக இருக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் துணைத் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார்.

Supreme Court
Supreme Court

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதன் சட்டவரையறை குறித்து அரசு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசின் துணைத் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, "உலகின் குடிபெயரும் மக்கள் அனைவருக்கும் இந்தியா ஒன்றும் தலைநகராக இருக்க முடியாது. இந்த அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்ற ஆதாரம் முன்னரே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மியான்மர் அரசை தொடர்புகொண்டு சட்டமுறைப்படி அவர்கள் அந்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதற்கான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது" என்றார்.

வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நேர்மைதான் முக்கியம்: மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய லாட்டரி விற்பனையாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.