ETV Bharat / bharat

நாட்டில் 4 லட்சத்தைக் கடந்தது தினசரி கரோனா பாதிப்பு

author img

By

Published : May 1, 2021, 9:29 AM IST

Updated : May 1, 2021, 12:58 PM IST

India reports 4 lakh new Covid cases in grim milestone, 3,523 deaths
கரோனா

09:25 May 01

நாடு முழுவதும் ஒரேநாளில் புதிதாக நான்கு லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக நான்கு லட்சத்து ஆயிரத்து 993 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒருநாள் மட்டும் உயிரிழப்பின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 523 ஆகும். குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 988.இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா கரோனா பாதிப்பு நிலவரம்

மொத்த பாதிப்பு: 1,91,64,969 

குணமடைந்தோர்: 1,56,84,406 

சிகிச்சையில் உள்ளோர்: 32,68,710 

உயிரிழப்பு: 2,11,853 

நாடு முழுவதும் மொத்தம் 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 டோஸ் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 18 - 44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இருப்பினும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியைப்  பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : May 1, 2021, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.