ETV Bharat / bharat

இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா- குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை

author img

By

Published : Jan 29, 2022, 11:37 AM IST

இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா
இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்2,35,352 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி: கரோனா மூன்றாவது அலையால் அதிகரித்த கரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை விட 16000 குறைவாகும், மேலும் பரவும் விகிதமானது நேற்று 15.88 இருந்த நிலையில் இன்று 13.39 சதவீதமாக குறைந்துள்ளது.இந்தியாவில் தொற்றால் 5871 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஐந்து மாநிலங்களுடன் கோவிட்-19 நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தை காணொளி மூலம் நடத்த உள்ளார்.

இந்த ஐந்து மாநிலங்களான பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கோவிட்டின் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கான பொது சுகாதாரத் தயார்நிலை மற்றும் அதற்கான பதில் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

ஆலோசனை

இதற்கு முன்னதாக தென் மாநிலங்களுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதில் தென் மாநிலங்களின் சுகாதரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இ-சஞ்சீவனி, தொலைத்தொடர்பு, வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதைக் கண்காணித்தல் மற்றும் குறைவான பரிசோதனை எடுக்கப்பட்ட மாநிலங்களை கண்டறிந்து RTPCR பரிசோதனைகளை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதில் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர், டாக்டர் சுதாகர்(கர்நாடகா), டாக்டர் வீனா ஜார்ஜ்(கேரளா), மா சுப்பிரமணியம்(தமிழ்நாடு), தன்னீரு ஹரிஷ் ராவ்(தெலுங்கானா) ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாநிலங்கள் முழுவதும் 15-18 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரபடுத்த முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று குறைந்து வருவது அனைத்து தரப்பினருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் குறைந்துவரும் கரோனா: 31,198 பேருக்கு உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.