ETV Bharat / bharat

இந்தியாவில் புதிதாக 2,539 பேருக்கு கோவிட் பாதிப்பு

author img

By

Published : Mar 18, 2022, 12:26 PM IST

Covid19
Covid19

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,539 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 2,528 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 30 லட்சத்து ஓராயிரத்து 477ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கரோனா உயிரிழப்பு 5 லட்சத்து 16 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. 29 ஆயிரத்து181 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஆறு லட்சத்து 33 ஆயிரத்து 867 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 180 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 97 கோடியே 04 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 81 கோடியே 81 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு கோடியே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர். மாநிலங்களின் வசம் தற்போதை நிலவரப்படி 17.22 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: இலங்கைக்கு சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.