ETV Bharat / bharat

"ஆபரேஷன் சக்சஸ்... பட் பேஷண்ட்?" - மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்கொள்ளும் இமாலய பிரச்சினைகள்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:16 PM IST

Updated : Dec 5, 2023, 7:07 PM IST

MP
MP

மத்திய பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றிய போதிலும், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் நடந்த முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களில் தோல்வியை தழுவி இருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜபல்பூர் : அண்மையில் முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இருந்த உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த பிரமூகர்கள் தோல்வியை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆட்சிக்கு தேவையான 163 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

160க்கும் இடங்களை வென்று இருந்தாலும் பலவேறு தொகுதிகளை பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருப்பது அக்கட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்து உள்ளது. பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சத்தமே இல்லாமல் சாதித்து காட்டி உள்ளனனர்.

முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இருந்த உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தோல்வியை தழுவி இருப்பது அதிர்ச்சிகர தகவலாக வெளிவந்து உள்ளது. பாஜகவின் பிரபல பட்டியலின தலைவர் மற்றும் மத்திய ஸ்டீல் அமைச்சர் பாகன் சிங் குல்ஸ்தே காங்கிரஸ் வேட்பாளர் செயின் சிங் பார்கேட்டின் 9 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை கவனித்து வந்த நரோட்டம் மிஸ்ரா, ததியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர பார்தியிடம் 7 ஆயிரத்து 742 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவினார்.

அதேபோல் சத்னா தொகுதி பாஜக எம்.பி. கணேஷ் சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்தார்த் குஷ்வாஹாவிடம் 4 ஆயிரத்து 41 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். முன்னாள் ஆயுஷ் அமைச்சர் பிரதீப் ஜெய்ஸ்வால், முன்னாள் அமைச்சர் ராம்பால் சிங் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் கமால் பட்டேல், காங்கிரஸ் வேட்பாளர் ராமகிருஷ்ண தோங்கேவிடம் 870 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதேபோல் ஜபூல்பூர் தொகுதியில் போட்டியிட்ட தருன் பனோட், சஞ்சய் சர்மா, போபால் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் பி.சி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் பிரபலங்கள் நடப்பு சட்டமன்ற தேர்தலில் தோல்வி முகத்தை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சத்தமே இல்லாமல் பாஜக வேட்பாளர்கள் பலரை சரித்து உள்ளனர். சொந்த தொகுதியில் பாஜக தலைவர்கள் வீழ்த்தப்பட்டு இருப்பது, என்ன தான் அரசியில் கட்சிகளின் பிம்மத்தின் கீழ் போட்டியிட்டாலும், வேட்பாளர்களின் நடத்தையை பொறுத்தே மக்கள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறார்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : "டிச.6 இந்தியா கூட்டணியின் கூட்டம் முறைப்படியான கூட்டம் அல்ல" - காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!

Last Updated :Dec 5, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.