ETV Bharat / bharat

CUSAT granted menstrual leave: கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிப்பு

author img

By

Published : Jan 15, 2023, 9:28 PM IST

Updated : Jan 15, 2023, 9:51 PM IST

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய் விடுமுறை (CUSAT granted menstrual leave) அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CUSAT granted menstrual leave
CUSAT granted menstrual leave

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Cochin University of Science and Technology - CUSAT) படிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் பருவத்தில் விடுமுறை (CUSAT granted menstrual leave) அளிப்பது இதுவே கேரளாவில் முதன்முறையாகும்.

இதற்காக மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் 2 சதவீதம் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பருவத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 75% வருகைப் பதிவு பெறுவது அவசியம். ஆனால், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களுக்கு 73% சதவீத வருகைப் பதிவு இருந்தாலே போதுமானது என்று பல்கலைக்கழகம் ஒரு முக்கிய முடிவை அப்பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

மாதவிடாய் விடுமுறை: பொதுவாக 75% வருகைப்பதிவு உள்ளவர்களே, இறுதி பருவத்தேர்வை எழுத தகுதியானவர்கள். இதனிடையே, உடல் நலக்குறைவால் விடுமுறை எடுப்பவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ சான்றிதழை வழங்கி அதற்கான அப்பருவத்தேர்வை எழுத தகுதி பெறும் வாய்ப்புள்ளது. இதில், மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை எடுக்க வாய்ப்பளித்து கூடுதலாக, 2% சதவீதம் தளர்வு அளித்துள்ளது. இதனால், மாணவிகளுக்கு பருவத்தேர்வு எழுத 73% இருந்தாலே போதுமானது.

இதன் தொடர்ச்சியாக, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய் விடுமுறை என்ற கருத்தை அறிமுகப்படுத்திய பெருமையை பெற்றுள்ளது. இதற்கான ஒவ்வொரு பருவத்தேர்வுக்கான 2% கூடுதல் விடுமுறை அளிப்பதற்கு அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

2% கூடுதல் விடுமுறை: இந்திய மாணவர் சங்கத் தலைவி நமீதா ஜார்ஜ். இவர் எல்எல்பி இறுதியாண்டு மாணவி ஆவார். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மேகா லௌஜன் ஆகிய இருவரும் கடந்தாண்டு டிச.22 ஆம் தேதி பொறுப்பேற்ற பின், டிச.24ஆம் தேதி இதற்கான கோரிக்கையை பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்தனர். இதற்கு கிடைத்த வெற்றியாகவே, 8000 மாணவர்கள் படிக்கும் கொச்சி பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய்க்காக 2% கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய் விடுமுறை என்ற கருத்தை அறிமுகப்படுத்திய பெருமையை பெற்றுள்ளது. இதற்கான ஒவ்வொரு பருவத்தேர்வுக்கான 2% கூடுதல் விடுமுறை அளிப்பதற்கு அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

SFI ஆதரவு: கடந்த ஜன.3 ஆம் தேதி, எழுத்துப்பூர்வமாக இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முடிவை மற்ற பல்கலைக்கழகங்களிலும் எடுக்க முயற்சிக்கும் பணியில் இந்திய மாணவர் சங்கத்தினர் பலமான ஆதரவு அளிப்போம் என்று அந்த சங்கத்தலைவி நமீதா தெரிவித்தார்.

இதையும் படிங்க: அட... அட.... அட: புதுமருமகனுக்கு 173 வகையான உணவு வகைகளுடன் விருந்து

Last Updated : Jan 15, 2023, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.