ETV Bharat / bharat

திருமலை திருப்பதி சிறப்பு தரிசனம்: டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

author img

By

Published : Aug 16, 2023, 7:01 PM IST

How to Book TTD Special Darshan Tickets: திருமலை திருப்பதி சிறப்பு தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் சாதாரண மக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடப்படும் இந்த டிக்கெட்டுகள் கண் இமைக்கும் நேரத்தில் பதிவாகி விடும். இந்நிலையில் இந்த டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

திருப்பதி: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகின் பணக்கார இந்துக் கோயில் என அறியப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளை தரிசிக்க உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் இந்த கோயில் என்றும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய முன் கூட்டியே முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.

ஆனால் அவசர தேவைகளில் உள்ளவர்களுக்காக மட்டும் சமீபத்தில் ஆர்ஜித சேவை சிறப்பு தரிசன திட்டம் கோயில் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரன மக்கள் பயன்பெரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தரிசனத்திற்கான டிக்கெட் விலை ரூ. 300-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டிக்கெட்டுகளை அவ்வளவு சுலபமாக பெற்றுவிடு முடியாது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட 15 நிமிடத்தில் மக்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்து விடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ஜித சேவை சிறப்பு தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி என பார்க்கலாம்.

ஆன்லைனில் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்? : திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை TTD tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கத்தில் பெறலாம். இந்த டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் வெளியிடப்படும்.

பெரும்பாலும் மாதத்தின் 24 அல்லது 25ஆம் தேதிகளில் வெளியாகும். இந்நிலையில் அந்த தேதிகளை கவனத்தில் கொண்டு TTD tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்திற்குள் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து உள்நுழைய வேண்டும். அதனை தொடர்ந்து உங்கள் கைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும்.

அந்த OTP-யை கொடுத்தால் மற்றொரு பக்கம் திறக்கும். அந்த பக்கத்தில், வரும் மாதங்களில் எந்தெந்த நாட்களில் தரிசநத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பது காட்டப்படும். அதில் பச்சை நிறத்தில் உள்ள தேதிகளை தேர்வு செய்தால் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். மஞ்சள் நிறத்தில் இருந்தால் அந்த டிக்கெட்டுகள் முன்பதிவாகிக்கொண்டு இருக்கிறது என அர்த்தம்.

சிவப்பு நிறத்தில் இருந்தால் அந்த டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவாகிவிட்டது என அர்த்தம். நீல நிறத்தில் இருந்தால் அந்த தேதிகளில் டிக்கெட் வெளியிடப்படவில்லை என அர்த்தம். இதை கவனத்தில் வைத்துக்கொண்டு தேதியை தேர்வு செய்து எத்தனை டிக்கெட்டுகள் வேண்டும் என்பதை அங்கு பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்தால் மட்டும் போதாது நமக்கான டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு விட்டதா என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்பு நேரம் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.

இது பொதுவாக குறைந்த பட்சம் 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம். டிக்கெட் உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, அங்கு தங்குவதற்கான அறைகளையும் அதே இணையதளப் பக்கத்தில் பெற முடியும். அதில் உள்ள ஆன்லைன் சேவைகள் என்ற உள்ளீடுக்குள் சென்று, தங்கும் இடம் என்பதை க்ளிக் செய்து, பெயர், பாலினம், வயது, புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து அறைக்கான கட்டணம் காண்பிக்கப்படும்.

அந்த கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு /UPI/ நெட் பேங்கிங் வழியாக செலுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தான தரிசனம் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யலாம். ஒரு டிக்கெட்டிற்கு திருப்பதி பிரசாதமாக ஒரு லட்டு வழங்கப்படும். கூடுதலாக தேவைப்படும் பக்தர்கள் அதே தளத்தில் முன்பதிவு செய்து பிரசாத லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: தடையில்லா சான்றிதழ் பெறாமல் அமெரிக்கா சென்ற வீரர்கள்.. விளக்கம் கேட்டு பாக். கிரிக்கெட் வாரியம் நேட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.