ETV Bharat / bharat

ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள்?

author img

By

Published : Aug 3, 2023, 6:28 AM IST

Today Rasi Palan
ராசி பலன்

Today Rasi Palan: ஆகஸ்ட் 3-ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களைக் காணலாம்.

மேஷம்: சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பணிகளில் ஈடுபடலாம். அதாவது சுற்றுப்புற சுத்திகரிப்பு, தெருக்களிலிருந்து குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு நல்ல செயல்களைச் செய்ய நீங்கள் விரும்பினாலும், ஒரே நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ரிஷபம்: சாதுர்யமான பேச்சுத் திறமையால் வியாபார ஒப்பந்தங்கள் சிறப்பாக முடிவடையும். இருந்தாலும், இந்த நடவடிக்கைகளால் இன்றைய தின செயல்பாடுகள் மெதுவாகவே நடைபெறும். உணர்வுபூர்வமாகவும், நெருக்கமாகவும் உணர்வதை தவிர்த்தால் மோதல்களை தடுக்கலாம். இல்லாவிட்டால், அவை வாழ்நாள் முழுவதும் மறக்காத சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் ஆசை இன்று ஊக்கமடையும். சுற்றுலா பயணத் திட்டத்தை திட்டமிடுவீர்கள். இது பயணத்திற்கு உகந்த நேரம். உங்கள் பயணத்திட்டம் பட்ஜெட்டுக்குள் அடங்குமாறு திட்டமிடுவீர்கள்.

கடகம்: வேறு எதையும் விட வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த விவேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் கொடுக்கப்பட்ட வேலையை விரைவில் நிறைவேற்றுவீர்கள். வேலை செய்வதற்கான உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சிம்மம்: சிரமங்கள் மற்றும் தடைகளை திறமையோடு கையாள்வதோடு, எப்படியாவது வெற்றியடைவதே உங்கள் திட்டவட்டமான இலக்காக இருக்கும். தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக தொடரும்.

கன்னி: பேச்சுத்திறமை மற்றும் படைப்பாற்றலே உங்களுக்கு வல்லமை மிக்க ஆயுதங்கள் என்றே சொல்லலாம். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும், மகிழ்ச்சியையும் பரப்ப வேண்டும். ஏதாவது அழுத்தமோ அல்லது சுமையோ இருந்தால் மட்டுமே, உங்கள் கற்பனை முழுமையாக வெளிப்படும்.

துலாம்: உங்களுடைய வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார். எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் மற்றொரு கூட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பீர்கள். உங்கள் தொழில் திறமையும், வேலையில் காட்டும் அக்கறையும் உரிய மதிப்பைப் பெறும்.

விருச்சிகம்: முதலாளியிடம் இருந்து திட்டு வாங்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்காது. தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் புதுமுகங்களுக்கு நேர்காணலில் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு: பணம் எளிதாக கைநழுவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவிங்களை குறைக்க முயலுங்கள். நாள் முழுவதும் நிதி தேவைகளை சமாளிக்க முயற்சித்தாலும், மாலை வேளையில், நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும். அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்புவீர்கள்.

மகரம்: வேலையை முடிப்பதற்காக நாள் முழுவதும் செலவிட்ட பிறகு, எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். திடீரென எதிர்பாராத லாபங்கள் கிடைக்கலாம், ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்பதை கவனமாக ஆலோசிக்க வேண்டும்.

கும்பம்: அனைத்தையும் தெரிந்துக் கொள்ளவேண்டும் என ஒரு சில நாட்கள் முயற்சிப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு நாள் இன்று. நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த எதிரியும் கூட என்பதை நிரூபிப்பீர்கள். உங்கள் சொந்த நலனுக்காக எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்குவீர்கள். குறிப்பாக, கடுமையான சூழலில் உங்களுடைய வலிமையை நிரூபிப்பீர்கள்.

மீனம்: வாழ்க்கையில் நிதி திட்டமிடல் என்பது மிகவும் முக்கியமானது. அதற்காக உங்கள் ஆற்றலை செலவிடுவீர்கள். திடீரென்று உங்கள் பணத்தை இழக்கலாம். குடும்பத்தில் ஒருவர் எதிர்பாராமல் நோய்வாய்ப்படுவது கவலையைத் தரும். இருப்பினும், விரைவில் அது சரியாகிவிடும். அதை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.