ETV Bharat / bharat

நாடாளுமன்றத் தேர்தல் 2024; பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 9:19 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் 2024
நாடாளுமன்றத் தேர்தல் 2024

HD Kumaraswamy meets Amit Shah: மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, டெல்லியில் பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜே.பி.நாட்டாவைச் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.

டெல்லி: மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாராசாமியும் நேற்று (செப் 21) நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்ததாக கூறப்பட்டது.

  • Met former Karnataka CM and JD (S) leader Shri H.D. Kumaraswamy Ji along with BJP President Shri @JPNadda Ji. Expressing their trust in PM @narendramodi Ji's vision of a developed India, the JD(S) has decided to be a part of the NDA. I warmly welcome JD(S) to the NDA family.… pic.twitter.com/LAM9uZdqKe

    — Amit Shah (@AmitShah) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், அவர்கள் சந்திப்பின் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து விட்டதாக கூறப்பட்டது. வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜக அதன் கூட்டணியை வலுப்படுத்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பங்கேற்காமல் இருந்தது. மேலும், தனது ஆதரவு யாருக்கு என்பதையும் தெரிவிக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருந்து வந்தது.

  • Met Former Chief Minister of Karnataka and JD(S) leader Shri H.D. Kumaraswamy in the presence of our senior leader and Home Minister Shri @AmitShah Ji.
    I am happy that JD(S) has decided to be the part of National Democratic Alliance. We wholeheartedly welcome them in the NDA.… pic.twitter.com/eRDUdCwLJc

    — Jagat Prakash Nadda (@JPNadda) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அமித்ஷா, அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான ஹெச்.டி.குமாரசாமியை சந்தித்தேன். பிரதமர் மோடியின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கமாக இருக்க முடிவெடுத்துள்ளது. NDA குடும்பத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வரவேற்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேற்கிறேன்” என அமித்ஷாவைப்போல் தெரிவித்து, “புதிய இந்தியா, வலிமையான இந்தியா” எனப் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அக்கட்சியின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தேர்தலாக அமைந்தது.

மேலும், டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கோ, பெங்களூருவில் நடந்த I.N.D.I.A கூட்டணியின் கூட்டத்திற்கோ மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய பாஜக எம்பியை எச்சரித்த மக்களவை சபாநாயகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.