ETV Bharat / bharat

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 'BH' பதிவு எண்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Dec 19, 2022, 1:02 PM IST

பிஹெச் பதிவு முறையில் தனியார் ஊழியர்களுக்கும்.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
பிஹெச் பதிவு முறையில் தனியார் ஊழியர்களுக்கும்.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

பிஹெச்(BH) பதிவு முறையில் தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களும் பதிவு செய்வதை அமல்படுத்துமாறு கர்நாடகா அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடையின்றி மாற்றும் வகையில், 2021ஆம் ஆகஸ்ட் 26இல் சட்டபூர்வமான பொது விதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதனையடுத்து பாரத் தொடர்வரிசை (BH) எனும் புதிய பதிவு முறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இல் சேர்க்கப்பட்டது.

இது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின்கீழ் வருகிறது. முன்னதாக தொழில் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் வாகனங்கள், அம்மாநிலத்துக்கு ஏற்றவாறு வாகனப் பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் தொடர்வரிசை பதிவு முறை, அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பாதுகாப்பு அலுவலர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஷாலினி மற்றும் பலர், “தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் வசதி மற்றும் ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு அடிக்கடி மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கும் உரிய ஆவணங்களின்படி பாரத் தொடர்வரிசை பதிவு முறையை பின்பற்ற அனுமதி வழங்க வேண்டும்” என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எம்.பூனாச்சா, “ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் மத்திய அரசு திருத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கும் பாரத் தொடர்வரிசை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஆம்பூர் இருளர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.