ETV Bharat / bharat

குஜராத் சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கனவை சுக்கு நூறாக்கிய பா.ஜ.க

author img

By

Published : Dec 8, 2022, 6:12 PM IST

மோடி
மோடி

தெற்கு குஜராத் மூலம் மாநில அரசியலை கைப்பற்ற முயற்சித்த ஆம் ஆத்மி கட்சிக்கு, பா.ஜ.க அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. சூரத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதியை பா.ஜ.க. தன் வசமாக்கியது.

அகமதாபாத்: குஜராத் சட்டமன்றத்தேர்தலில் அமோக வெற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி பெரிய அளவில் சோபிக்கத் தவறியது.

தெற்கு குஜராத் பகுதியில் பா.ஜ.க.வுக்கு, ஆம் ஆத்மி கட்சி கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சூரத் நகராட்சி தேர்தலில் 28.47 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, ஒட்டுமொத்தமாக உள்ள 120 வார்டுகளில் 27 வார்டுகளை கைப்பற்றியது.

உள்ளாட்சித்தேர்தல் வெற்றியை அடிப்படையாக கொண்டு தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கடும் சவால் அளிக்கவும் தெற்கில் இருந்து நுழைந்து குஜராத் அரசியலை கைப்பற்றவும் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டது.

கடல் மண் வீட்டை கல்லால் அடித்தது போல், தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளன. சூரத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. இமாலய வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓர் இடத்தை தன் வசமாக்கியது.

அதேபோல், தெற்கு குஜராத்தில் நர்மதா, தபி, சூரத், டாங்க், வல்சாட், நவ்சாரி உள்ளிட்ட 35 தொகுதிகள் உள்ளன. இதில் 32 தொகுதிகளை பா.ஜ.க. தன் வசமாக்கியது. காங்கிரஸ் இரு இடத்திலும், ஆம் ஆத்மி ஒன்றிலும் முன்னிலை வகிக்கின்றன.

உள்ளாட்சி வெற்றியை ஆம் ஆத்மி கட்சி சரிவர பயன்படுத்தாதே அக்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெற்றி பெற்றவர்களை பாதுகாக்கும் காங்கிரஸ் - இமாச்சலில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.