ETV Bharat / bharat

Gujarat Assembly Polls: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கொண்டாட்டம்

author img

By

Published : Dec 8, 2022, 1:06 PM IST

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கொண்டாட்டம்
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கொண்டாட்டம்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்துவருகிறது. பாஜக 154 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. இதனால் பாஜகவினர் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.

இதனிடையே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முதலமைச்சர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,07,960 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 154 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சாதனையாக ஏழாவது முறை பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க: குஜராத்தில் இமாலய வெற்றியை நெருங்கும் பாஜக.. என்ன சொல்கிறது வாக்கு எண்ணிக்கை நிலவரம்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.