ETV Bharat / bharat

காஷ்மீரிலிருந்து கையெறிகுண்டுடன் பயணம்.. தமிழக ராணுவ வீரரிடம் விசாரணை...

author img

By

Published : May 2, 2022, 7:21 PM IST

தமிழக ராணுவ வீரரிடமிருந்து கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Grenade
Grenade

ஜம்மு-காஷ்மீர்: ஶ்ரீநகர் விமான நிலையத்தில், சம்பத் என்ற ராணுவ வீரரின் உடமைகளை அதிகாரிகள் சோதித்தபோது, அவரிடம் கையெறி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கையெறி குண்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சம்பத் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. சம்பத் ஶ்ரீநகரில் இருந்து, டெல்லி வழியாக சென்னை செல்ல இருந்தார் என்பதும் தெரியவந்தது. சம்பத்திடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:இலங்கையில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.