ETV Bharat / bharat

அம்ரித் பால் சிங் மனைவி கைது - லண்டன் தப்ப இருந்தவரை மடக்கிப் பிடித்த போலீசார்!

author img

By

Published : Apr 20, 2023, 1:34 PM IST

லண்டன் தப்ப இருந்த அம்ரித் பால் சிங்கின் மனைவியை விமான நிலையத்தில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Kirandeep Kaur
Kirandeep Kaur

அமிர்தசரஸ் : தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அம்ரித் பால் சிங்கின், மனைவி லண்டன் தப்பிச் செல்ல இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் ஆதரவாளரகள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு அமைப்பான வாரீஸ் டி பஞ்சாப் குழுவைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். அப்போது, அம்ரித் பால் சிங் தனது உதவியாளரை விடுதலை செய்யக் கோரி கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கொண்டு தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அம்ரித் பால் சிங்கின் உதவியாளரை போலீசார் விடுவித்தனர். பின்னர், அம்ரித் பால் சிங்கையும் அவரது கூட்டத்தையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய முயன்ற போது அவர்கள் தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அம்ரித்பாலின் உறவினர் ஹர்ஜித் சிங், அவரது உதவியாளர்கள் தல்ஜித் சிங் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் மற்றும் பகவந்த் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

மறுபுறம் அம்ரித் பால் சிங்கை கைது செய்துவிட்டு போலீசார் நாடகமாடுவதாக கூறி அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து உள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள சாலைகளில் அம்ரித் பால் சிங் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது.

மேலும் காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அம்ரித் பால் சிங் வெளியிட்ட வீடியோவும் வேகமாக பரவியது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அம்ரித் பால் சிங் கைது நடவடிக்கையை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கலவர தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக உள்ள அம்ரித் பால் சிங் தேடப்பட்டு வரும் நிலையில், அவரது மனைவி கிரண்தீப் கவுரும் விமானம் மூலம் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அமிர்தரசஸ் விமான நிலையத்திற்கு விரைந்த போலீசார், லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த கிரண்தீப் கவுரை மடக்கிப் பிடித்தனர். கிரண்தீப் கவுரிடம் அவரது கணவர் அம்ரித் பால் சிங் குறித்து விசாரித்து வருவதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : அமெரிக்காவில் ஏரியில் மிதந்த இந்திய வம்சாவெளியின் சடலம் - என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.