ETV Bharat / bharat

Farm laws repeal bill: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

author img

By

Published : Nov 29, 2021, 12:49 PM IST

Updated : Nov 29, 2021, 1:41 PM IST

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Lok Sabha
Lok Sabha

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (நவ 29) காலை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மசோதா மக்களவையில் நிறைவேறியாதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

முன்னதாக, மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து, அரசு சட்டங்களை திரும்பப்பெறும் என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ஆம் தேதி அறிவித்திருந்தார்.

வேளாண் சட்டம் வாபஸ் பெற்றுள்ள நிலையில், விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் விவசாயிகள் தரப்பும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசிடம் கோரிக்கை வைத்து போராடிவருகின்றன.

குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் என கூட்டத்தொடருக்கு முன்பாக இன்று காலை பிரதமர் மோடி கோரிக்கைவைத்தார்.

இதையும் படிங்க: முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Last Updated : Nov 29, 2021, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.