ETV Bharat / bharat

'தேர்வே வேண்டாம் டிகிரி தர்றோம்'; போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி கும்பல் கைது

author img

By

Published : Dec 6, 2022, 9:58 PM IST

’தேர்வே வேண்டாம் டிகிரி தாரோம்..!’ ; போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி கும்பல் கைது
’தேர்வே வேண்டாம் டிகிரி தாரோம்..!’ ; போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி கும்பல் கைது

கர்நாடகாவில் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து பணத்திற்கு விற்று வந்த தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரு: போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமாகி வருகிறது. இந்நிலையில், தேர்வே எழுதாமல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பலர் பெற்று வரும் மோசடி வியாபாரங்கள் பெங்களூருவில் நடந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஓர் தனியார் கல்வி நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் மூலம் அங்கு பல்வேறு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுவது தெரியவந்தது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடி வேலையை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வலைதளம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்ட கிஷோர், சாரதா, ஷில்பா, ரஜன்னா ஆகியோருடன் 1,000 போலி மதிப்பெண் சான்றிதழ்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதில், கர்நாடகா திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 பிரபலமான பல்கலைக்கழகத்தின் சீல்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மோசடியை மூன்று இடங்களில் அலுவலகங்கள் அமைத்து இணையத்தில் விளம்பரம் செய்து நிகழ்த்தியுள்ளனர். அந்த விளம்பரங்களில் 'மதிப்பெண் சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள் எங்களிடம் பணம் செலுத்தி எந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களை வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்' என அறிவித்துள்ளனர்.

அதன்படி, சமீபத்தில் ஒரு இளைஞருக்கு வாட்ஸ்-அப் மூலம், “நீங்கள் ஒட்ரு லட்ச ரூபாய் தந்தால், தேர்வே எழுதாமல் மதிப்பெண் சான்றிதழை நாங்கள் தருவோம்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த இளைஞர் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த மோசடி கும்பல்களின் அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதையடுத்து இந்த மோசடி கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது. இந்த கும்பல், பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் சீல்களுடன் +2, பியூசி, பொறியியல் போன்ற படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிர லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல் வீச்சு; பலர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.