ETV Bharat / bharat

தேர்தல் பணியாளர்களுக்கு தேர்வு- தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு

author img

By

Published : Jun 21, 2022, 12:27 PM IST

தேர்தல் பணியாளர்களுக்கு தேர்வு- தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு
தேர்தல் பணியாளர்களுக்கு தேர்வு- தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு

தேர்தலின் போது தவறு ஏற்படுவதை தவிர்க்க தேர்தல் பணியாளர்களுக்கு தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ஹீரா லால் மண்டல் தெரிவித்துள்ளார்.

ராஞ்சி (ஜார்கண்ட்): இந்தியாவில் முதன்முறையாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு முன் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் பயிற்சியில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையம் (EC) முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மந்தர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த முறை அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தேர்வை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும். தேர்வின் போது, ​​விண்ணப்பதாரர்கள் 25 கேள்விகளுக்கு அரை மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் பயிற்சி பெற்று மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

ஒரு தேர்தல் பணியாளர் மூன்று முறையும் தோல்வியுற்றால் அது அவரது தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படும். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் உடனடி சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வந்த NITI ஆயோக்கின் பயிற்சியாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா ஸ்ருதி கூறுகையில், இது தேர்தல் ஆணையத்தின் நல்ல முயற்சியாகும். இதன் மூலம் பயிற்சி பெற்றவர்கள் எவ்வளவு கற்றுக்கொண்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் என கூறினார்.

தேர்வு நடத்துவதற்கு சுமார் ரூ.3.50 லட்சம் செலவிடப்படும். இந்தத் தொகையை கவுஹாத்தியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் செலுத்தும். 2024 சட்டமன்றத் தேர்தலில் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், 81 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள தேர்தல் பணியாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆருத்ரா நிதி நிறுவனத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம் ? - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.