சஞ்சய் ராவத் வீட்டில் மீண்டும் அமலாக்கத் துறை ரெய்டு... கைது செய்ய வாய்ப்பு?

author img

By

Published : Jul 31, 2022, 8:39 AM IST

sanjay raut  ED raid  ED raid on sanjay raut house  ED raid on sanjay raut house at Mumbai  அமலாக்கத்துறை ரெய்டு  சஞ்சய் ராவத்  சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் இன்று மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் கைதாக வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிரா: மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் இன்று (ஜூலை 31) காலை 7 மணி முதல், அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வருமாறு சஞ்சய் ராவத்தை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரை காரணம் காட்டி விசாரணைக்கு செல்வதை சஞ்சய் ராவத் தவிர்த்து வந்தார்.

இதனிடையே தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத் துறையை அணுகி விசாரணையில் கலந்து கொள்ள ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை அவகாசம் கோரினார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத் துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியது. அதன்படி, ஜூலை 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், தற்போது சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், சில ஆவணங்களை அவர்கள் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சஞ்சய் ராவத் இன்று கைது செய்யப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு: டி.ஆர். பாலு கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.