ETV Bharat / bharat

டெல்லியில் காற்று மாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது - எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்

author img

By

Published : Jan 15, 2021, 4:03 PM IST

டெல்லியில் காற்றுமாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது - எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்
டெல்லியில் காற்றுமாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது - எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்

டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு (ஏர் குவாலிட்டி இன்டக்ஸ்) 431 புள்ளிகளை எட்டி காற்றின் மாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் (எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்) அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, ஆர்.கே.புரம் பகுதியில் 492 புள்ளிகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக துவாரகா செக்-8 பகுதியில் 497 புள்ளிகள் பதிவாகியுள்ளன. அசோக் விஹாரில் 472 புள்ளிகளும், ஷாடிபூரில் 443 புள்ளிகளும், வடக்கு கேம்பஸில் 448 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் காற்றுமாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது - எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்
டெல்லியில் காற்றுமாசு நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது - எஸ்.ஏ.எஃப்.ஏ.ஆர்

காற்று மாசு காரணமாக அதனை நுகர்வோருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களும், நுரையீரல் நோய் உள்ளிட்ட சுவாச கோளாறு உடையவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என டெல்லி அரசு கவலை தெரிவித்துள்ளது.

காற்று தர குறியீடு தொடர்ந்து மோசமடைந்தால் டெல்லியில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் 3 நாள்களுக்கு இயல்பைவிட அதிகமான அடர்த்தியான பனிப்பொழிவு இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (ஜன.14) எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.