ETV Bharat / bharat

நடுரோட்டில் பெண்ணை தாக்கி காரில் ஏற்றிய கொடூரம் - என்ன நடந்தது?

author img

By

Published : Mar 19, 2023, 2:48 PM IST

பரபரப்பான டெல்லி சாலையில் பெண் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு காரில் ஏற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: பரபரப்பான டெல்லி ரோகினி சாலையில் போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியில் சென்று கொண்டு இருந்த ஒரு காரில் இருந்து ஒரு பெண் வெளியேற முயற்சிக்கிறார். சற்று நேரத்தில் காரை விட்டு வெளியேறிய பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மீண்டும் காரில் ஏற்ற இளைஞர் ஒருவர் முயற்சி செய்கிறார்.

அந்த வாடகை காரில் ஏற பெண் மறுத்த நிலையில், அவரது உடையின் காலரை பிடித்து இழுக்கும் இளைஞர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கி காரில் ஏற்றுகிறார். காரின் மற்றொரு கதவு பக்கம் இன்னொரு இளைஞர் நின்று கொண்டு இதை வேடிக்கை பார்க்கிறார். அந்தப் பெண் காரின் உள்ளே சென்றதும், அவரைத் தாக்கிய இளைஞர், டிரைவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்.

வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மற்றொரு இளைஞர் காரில் பெண்ணுக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். கடந்த சனிக்கிழமை (மார்ச்.18) இரவு எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: கர்நாடக வனத்துறை அத்துமீறல்; தமிழ்நாடு - கர்நாடகா அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவிசெய்ய முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து ஒருவர், எடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த பெண் இழுத்துச் செல்லப்பட்ட கார் அரியானா மாநிலத்தின் பதிவு எண்ணை கொண்டு இருந்தது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவிய நிலையில், வாடகை கார் மற்றும் கார் ஓட்டுநரை கண்டுபிடிக்கும் விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாடகை லார் ரோகினி நகரில் இருந்து விகாஷ்பூரிக்கு செல்ல புக் செய்யப்பட்டு உள்ளது.

இரு இளைஞர்கள் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், மூன்றாவதாக அந்தப் பெண் காரில் ஏறி பயணித்து உள்ளார். பாதி வழியில் இளைஞருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் காரை விட்டு, அந்தப் பெண் வெளியேற முயன்று உள்ளார்.

இதனை அடுத்து வீடியோவில் பதிவாகி உள்ள அந்த களேபர காட்சி அங்கு அரங்கேறி உள்ளது. எந்நேரமும் வாகனப் போக்குவரத்துடன், பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் பெண் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிய இளைஞர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈகுவடார், பெருவில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயரும் அபாயம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.