கிரெடிட் கார்டு vs பே லேட்டர் - ஷாப்பிங் செய்ய எது சிறந்தது?

author img

By

Published : Sep 26, 2022, 4:57 PM IST

Credit

ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் கார்டு, பே லேட்டர் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பே லேட்டர் வசதி, கிரெடிட் ஸ்கோர்களை பாதிக்கக்கூடும்.

ஹைதராபாத்: பண்டிகைக் காலம் வந்துவிட்டதால் வாடிக்கையாளர்களைக் கவர, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏராளமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதனால், பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தற்போதை காலகட்டத்தில் பொருட்களை வாங்கும்போது, நேரடியாக பணம் கொடுப்பதை விட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்த இரண்டும் இல்லாதவர்கள் பே லேட்டர் (Buy Now Pay Later) முறையை பயன்படுத்துகின்றனர்.

இந்த முறையில், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணம் செலுத்தலாம். இந்த குறுகிய கால கடன் வசதிக்கு, 15 முதல் 45 நாட்கள் வரை வட்டி கிடையாது. இதன் மூலம் 500 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

இந்த வசதியை சில நிதி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பொதுமக்கள் கையில் காசு இல்லாத நிலையில், பொருட்களை வாங்க வைக்கின்றன. அவர்கள் தரும் குறிப்பிட்ட கடன் வரம்புக்குள் எதையாவது வாங்க வாடிக்கையாளர்களும் முன்வருகின்றனர். அந்த கடனை 15 முதல் 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தவில்லை என்றால், அடுத்த நாள் முதல் அபராதம் விதிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளிலும், இதுபோன்ற அபராதம் விதிக்கும் முறை உள்ளது. கடனை திருப்பிச் செலுத்த 45 முதல் 50 நாட்கள் வரை அவகாசம் தரப்படும். தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதேநேரம் கிரெடிட் கார்டுகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. பெரிய பில்களை தவணைகளாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், buy now pay later-இல் இதுபோன்ற வாய்ப்புகள் இல்லை. பே லேட்டர் பயன்படுத்துவதால் கிரெட் ஸ்கோர்கள் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

பொருட்களை வாங்குபவர்கள் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தங்களது நிதி நிலையைப் பார்ப்பது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்குவது சிறந்தது. சில நாட்களில் செலுத்த முடியும் என்ற பட்சத்தில் பிஎன்பிஎல்-ஐ பயன்படுத்தலாம். ஆனால், கடன் வாங்குவதை வாடிக்கையாக மாற்றாமல், நமது நிதி நிலைக்கேற்ப பொருட்களை வாங்கி பண்டிகையை கொண்டாடுவது எப்போதும் சிறந்தது.

இதையும் படிங்க: கோ பே பாலிசியின் சூட்சமம்..! காப்பீடு எடுக்கும் போது இதை மறந்துடாதீங்க..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.