ETV Bharat / bharat

கோவேக்ஸின் மூன்றாம் தவணை பரிசோதனை முடிவுகள் ஜுலையில் வெளியீடு - பாரத் பயோடெக்

author img

By

Published : Jun 10, 2021, 7:21 AM IST

covaxin
covaxin

ஹைதராபாத்: கோவேக்ஸின் மூன்றாம் தவணை பரிசோதனை முடிவுகள் ஜுலையில் பொதுவெளியில் வெளியிடப்படும் என அதனைத்தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தடுப்பூசி நிறுவனம், பாரத் பயோடெக். கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை உற்பத்தி செய்து, உரிய அங்கீகாரம் பெற்று நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் காட்டப்பட்டு, வரும் ஜூலை மாதத்தில் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், 'கோவேக்ஸின் தடுப்பூசியின் பலன்களை சிலரிடம் போட்டுவிட்டுப் பரிசோதிக்கிறோம். அப்போது கோவேக்ஸினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு திறன் 78 விழுக்காடாக உள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிரான செயல்திறன் 100 விழுக்காடாக உள்ளது.

நாங்கள் முன்னதாக சிறந்த பாதுகாப்பான தடுப்பூசிகளை உலகளவில் உருவாக்கி இருக்கிறோம். குறிப்பாக, போலியோ, ஜப்பானிய என்சிபாலிடிஸ், ரேபீஸ், ஹெபாடைடீஸ் ஏ ஆகிய தொற்றுகளுக்கு உரிய தடுப்பூசிகளைத் தயாரித்து இருக்கிறோம்' என விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் கோவேக்ஸின் செயல்திறன் குறித்து அதனைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் தெரிவித்ததாவது, 'கோவேக்ஸின் ஆய்வின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்குப் பிறகு, மனித உடலில் நோய் எதிர்ப்புத்திறனும் மற்றும் புரத உற்பத்தியும் அதிகரிப்பதற்கான சான்றுகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் கோவேக்ஸின், கோவிஷீல்டை விட ஆன்டிபாடிகளை மிகக்குறைந்த அளவில் உருவாக்குகிறது என்னும் கூற்று மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளியிட்டது அல்ல. பாரத் பயோடெக் தயாரிக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும் தீவிரமான பாதுகாப்பு மற்றும் செயல் திறன் உடையது' என்று தெரிவித்துள்ளது.

கோவேக்ஸினின் உலகளாவிய செயல்திறனை சரிபார்க்க பாரத் பயோடெக் நிறுவனம் 4ஆம் கட்ட பரிசோதனைகளையும் செய்து, உரிய அங்கீகாரம் பெற இருக்கிறது என அந்நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான அம்பாசமுத்திரம் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.