ETV Bharat / bharat

பதவி உயர்வில் இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு துணை நிற்போம் என உச்சநீதிமன்றம் உறுதி

author img

By

Published : Jul 22, 2023, 6:39 PM IST

Etv Bharat
Etv Bharat

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரிய மாற்றுத்திறனாளியான ரிசர்வ் வங்கி ஊழியருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: 50 சதவீதம் மாற்றுதிறனாளியான ஆர்பிஐ வங்கி ஊழியர் ஏ.கே. நாயர் தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் பல வருடங்கள் கழித்து அவருக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நாயர், ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பதவி உயர்வு பெருவதற்கான தேர்வை எழுதி 3 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தனக்கு கருணை மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு இணையான இட ஒதுக்கீடு மற்றும் மாற்று திறனாளி என்ற அடிப்படையில் தனக்கு கருணை மதிப்பெண் வழங்கி பதவி உயர்வு பெற்றுதர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

நீண்ட நாட்களாக இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2006ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏ.கே. நாயர் ரிட் மனுவை சமர்பித்த நாளிலிருந்து அவருக்கு சொல்வழி பதவி உயர்வையும், கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உண்மையான பதவி உயர்வையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அப்போது பேசிய நீதிபதி தத்தா, நலிவடைந்த மற்றும் ஏழை பிரிவினருக்கு நீதி கிடைப்பதன் மூலம் அவர்களை மற்ற சமூகத்தினருடன் சமமாக நடத்த முடியும் என்பதே அடிப்படையான கருத்து என கூறினார். மேலும், பலம் வாய்ந்த பிரிவினருடன் நலிவடைந்த பிரிவினர் போட்டிபோடும்போது, சமமான 'சமூக நீதி' பெறுவதற்கான சவாலை எதிர்கொள்ள, நீதிமன்றங்கள் துணை நிற்கும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவை பரிந்துரைத்து ஆர்பிஐக்கு இந்த வழக்கு தொடர்பான உத்தரவை நீதிபதி வழங்கினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி தத்தா, பொது வேலை வாய்ப்புத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், சட்டத்தால் வழங்கப்படும் உரிமைகள், மற்றும் சலுகைகள் மறுக்கப்பட்டால், "அத்தகைய நபர்களுக்கு இழைக்கப்படுவது தவிர்க்க முடியாத மனித உரிமை மீறல் எனவும், இந்த விஷயத்தில் ஆர்பிஐ மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டிருக்க தவறி விட்டது எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆர்பிஐ பணியில் இருந்து நாயர் ஓய்வு பெறுவதற்கு ஓரிரு வருடங்கள் உள்ள நிலையில், அவரது ஓய்வூதியப் பலன்கள் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் எனவும், அவரது பதவி உயர்வுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆர்பிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாயர் "எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இணையாக தனக்குக் கிடைக்கும் தளர்வுப் பலனைக் கோரி ஆர்பிஐ-யில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நிராகரித்த ஆர்பிஐ, மாற்றுத்திறனாளிகளுக்கென கருணை மதிப்பெண்களை நீட்டிக்க சட்டத்தில் எந்த விதியும் இல்லை என பதிலளித்திருந்தது. இதனை தொடர்ந்து நாயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதையும் படிங்க: இறுதி நிமிடத்தில் ஆட்சியைத் தக்க வைத்த காங்கிரஸ் - சத்தீஸ்கரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.