நாளை விண்ணில் பாய்கிறது EOS-03 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்!

author img

By

Published : Aug 11, 2021, 9:01 AM IST

ஜிஎஸ்எல்வி எஃப்10

அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-03, ஜிஎஸ்எல்வி -எஃப்10 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

ஜிஎஸ்எல்வி - எஃப் 10 வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-03க்காக கவுண்ட் டவுன் இன்று (ஆக.11) காலை தொடங்கியுள்ளது.

இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. "GSLV-F10/EOS-03 மிஷன் தொடங்குவதற்கான கவுண்ட் டவுன் இன்று (ஆக.11) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 03.43 மணிக்குத் தொடங்கியது.

புவி ஒத்திசைவு செயற்கைக்கோளை செலுத்தும் ஏவுகணையான எஃப்10 ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-03ஐ விண்ணில் செலுத்தும்.

ஜிஎஸ்எல்வி எஃப்10
ஜிஎஸ்எல்வி எஃப்10

வானிலை மாற்றங்களுக்கு உள்பட்டு நாளை (ஆகஸ்ட்.12) 05.43 மணிக்கு தோராயமாக செயற்கைக்கோள் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது” என்று இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி வாகனத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணிகளும் முன்னதாகத் தொங்கியுள்ளது.

EOS-03 என்பது ஒரு அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். ஜிஎஸ்எல்வி-எஃப்10 மூலம் புவிசார் ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் அதன் உள் உந்துவிசை முறையைப் பயன்படுத்தி இறுதி புவிசார் சுற்றுப்பாதையை அடையும்.

இதையும் படிங்க: ’இது ஸ்பேஸ் ஒலிம்பிக்...’ - விண்கலத்தில் மிதந்தபடி விளையாடி குதூகலித்த நாசா வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.