ETV Bharat / bharat

"மோடி மேஜிக் இமேஜை வென்ற பிராண்ட் ராகுல்" - காங்கிரஸ் களியாட்டம்!

author img

By

Published : May 15, 2023, 7:02 PM IST

Updated : May 15, 2023, 7:59 PM IST

கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மோடி மேஜிக் என்ற பிம்பத்தை பிராண்ட் ராகுல் வென்றதாக காங்கிரஸ் சமூக வலைதள பிரிவுத் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்து உள்ளார்.

Congress
Congress

டெல்லி : மோடி மேஜிக் என்ற பிம்பத்தை பிராண்ட் ராகுல் என்ற இமேஜ் தவிடு பொடியாக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் சமூக வலைதள பிரிவின் தலைவருமான சுப்ரியா ஷிரினேட் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் மேலிடத்தை சந்திக்க டெல்லி விரைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கர்நாடக தேர்தலில் மோடி மேஜிக் என்ற பிம்பத்தை பிராண்ட் ராகுல் என்ற இமேஜ் உடைத்து தவிடு பொடியாக்கியதாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெறுப்பு அரசியலை, அன்பு அரசியல் வென்றதை எடுத்துக் காட்டுவதாக கூறினார்.

கர்நாடக தேர்தல் முடிவின் பிரதிபலிப்பாக அம்மாநிலத்தில் அன்பின் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், இது வெறும் டிரெய்லார் தான் என்றும் முழு படமும் விரைவில் வெளியாகும் என்றார். மேலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவிலான அன்பின் கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் முடிவின் மையக் கருத்தாக மோடி மேஜிக் பிம்பத்தை, பிராண்ட் ராகுல் என்ற இமேஜ் வென்று இருப்பது வெளிப்பட்டு உள்ளதாக சுப்ரியா கூறினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் மக்களவையில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் கர்நாடக தேர்தலும் முக்கியமானதாக கருதப்பட்டதாக சுப்ரியா கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது கர்நாடகாவில் உள்ள 51 தொகுதிகளுக்கு ராகுல் காந்தி சென்றதாகவும், அதிலிருந்து பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார். அதுவும் பாஜக வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளும் பாரம்பரியமாக அங்கு வெற்றி பெற்று வருவதாகவும் சுப்ரியா ஷிரினேட் கூறினார்.

கர்நாடகா முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டதை ஒப்பிட்டு பார்க்கும் போது பாஜக 25 தொகுதிகளில் தோல்வி அடைந்து உள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பிரதமர் மோடி எதிராக எதிர்ப்பு அலை தொடங்கி அது ராகுல் காந்திக்கு ஆதரவு அலையாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸின் இந்த அமோக வெற்றியின் மூலம், ஒருவரின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்துவிடலாம் என்று நினைக்கும் சர்வாதிகாரிகளுக்கு மக்கள் வலுவான பதிலடி கொடுத்துள்ளதாக அவர் கூறினார். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் பஜ்ரங்தளத்தை, பஜ்ரங்பாலியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், ஹிஜாப், ஹலால் பிரச்சனைகளை கொண்டு ஊறு விளைவிக்கும் அரசியலலை மேற்கொள்ள வேண்டாம் என மக்கள் தெளிவுபடுத்தி உள்ளதாக சுப்ரிய ஷிரினேட் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்திக்கு எதிரான மனுவில் பாட்னா உயர் நீதிமன்றம் விசாரணை!

Last Updated :May 15, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.