ETV Bharat / bharat

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் கொடுக்காத காங்கிரஸ்.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 4:19 PM IST

congress-releases-6th-list-for-rajasthan-polls-denies-ticket-to-minister-mahesh-joshi
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்...சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் கொடுக்காத காங்கிரஸ்! காரணம் என்ன?

Rajasthan Election 2023: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்த்தலுக்கான காங்கிஸ் 6வது கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் கேபினேட் அமைச்சர்களாக இருக்கும் இருவரின் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த மாதம் நவ.25ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு நவ.25 தேதி தேர்தல் நடக்கிறது. பின்னர் டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி 5 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது 6 கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 178 தொகுதிகளுக்குக் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஜெய்ப்பூர் நகர உட்பட்ட ஹவா மஹால் தொகுதியில் தற்போது கேபினேட் அமைச்சராக இருக்கும் அமைச்சர் மகேஷ் ஜோஷிக்கு சீட் கொடுக்க மறுத்துள்ள காங்கிரஸ்,

அவருக்குப் பதிலாக ஜெய்ப்பூர் நகரப் பிரிவுத் தலைவர் ஆர்.ஆர்.திவாரி சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் சாந்தி தரிவாலின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது ராஜஸ்தான் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் சாந்தி தரிவால் மற்றும் மகேஷ் ஜோஷி ஆகியோர் ஒழுக்கமின்மை காரணமாகக் காங்கிரஸ் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சியின் பணியாற்றும் அடி மட்ட தொண்டனுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை எனவும் கூறுகின்றன.

தொடரும் இழுபறி: ராஜஸ்தானில் மாநிலத்தில் சீட் கொடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் குழப்பத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 கட்டங்களாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை 200 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. ஆறாவது பட்டியலில் 23 பெயர்கள் வந்த பிறகும், மேலும் 21 வேட்பாளர்கள் தற்போது கட்சியின் பட்டியலுக்காகக் காத்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் சட்ட போரவை தேர்தல்களைப் பொறுத்த வரையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த சரித்திரம் இல்லை. இந்நிலையில் தற்போது ஆளும் காங்கிரஸ் கேபினேட் அமைச்சர்களுக்கே சீட் கொடுக்காமல் போனது அந்த கட்சிக்கு பின்னடைவா தருமா அல்லது ஆட்சியை மீண்டும் தக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.