ETV Bharat / bharat

2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சிகரெட் விலை ஏற்றம்!

author img

By

Published : Feb 1, 2023, 5:45 PM IST

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

Railway's capital outlay earmarked as Rs 2.4 lakh crore; nine times of FY 13-14
Railway's capital outlay earmarked as Rs 2.4 lakh crore; nine times of FY 13-14

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் உரையில் பொருட்களின் விலை, ஏற்ற இறக்கங்கள் குறித்து பட்டியல்:

பட்ஜெட்டில் விலையேற்றம் அடைந்துள்ள பொருட்கள்:

  • தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள்
  • செம்பு துகள்கள்
  • ரப்பர்
  • சிகரெட்டுகள்
  • இறக்குமதி செய்யப்பட்ட மின்சார சமையலறை புகைப்போக்கி (இறக்குமதி வரி 7.5% லிருந்து 15% ஆக உயர்த்தப்படுகிறது)

முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் ஆகியவற்றை அரசாங்கம் 60% முதல் 70% வரை உயர்த்தியுள்ளது.

பட்ஜெட்டில் விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல்:

  • தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் DSLRகளுக்கான கேமரா லென்ஸ்கள்
  • டிவி பேனல்களின் பாகங்கள்
  • லித்தியம் அயன் பேட்டரிகள்
  • எத்தில் ஆல்கஹால்
  • இறால் உள்நாட்டு உற்பத்தி
  • வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வெள்ளிக் கவசங்கள், பார்கள் மற்றும் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு முன்மொழிந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 'தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட டோர் மற்றும் பார்களால் செய்யப்பட்ட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்' தெரிவித்தார். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் டோர் மற்றும் பார்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டது.

இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.