ETV Bharat / bharat

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!

author img

By

Published : Feb 1, 2023, 4:09 PM IST

2023-24ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான ஒருமுறை சேமிப்புத் திட்டத்தை அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2023-24 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதாலும் அதனால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதாலும் நடப்பு நிதி பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முத்தாய்ப்பை விளங்கும் அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டத்தை நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிப்புத் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். மகிளா சம்மான் பச்சாட் பத்ரா திட்டத்தில் பெண்கள் 2 லட்சம் ரூபாய் வரை வைப்பு நிதியாக வைக்க முடியும் என்றார்.

இந்த புதிய திட்டம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என்றும்; ஏறத்தாழ இரு ஆண்டுகள் இந்த திட்டத்திற்கான கால அளவீடு என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 7.5 சதவீதம் நிலையான வட்டி வழங்கப்படும் என்றார்.

அதேநேரம், திட்டத்தினிடையே பகுதி தொகையை திரும்பப்பெறும் வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையின்போது, ’பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். புதிய திட்டமானது மகிளா சம்மான் பச்சாட் பத்ரா என்று அழைக்கப்படும்.

இந்தப் புதிய திட்டமானது பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை டொபாசிட் செய்ய முடியும். இந்த புதியத் திட்டம் 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தப் புதிய திட்டத்தில் நிலையான வட்டியாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்தில் பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது’ என்றார்.

அதேபோல் அஞ்சலக மாதாந்திர வருமான கணக்குத் திட்டத்தின் கீழ் தனிநபர் கணக்குகளில் உச்சபட்ச வரம்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாகவும், கூட்டுக்கணக்குகளில் 9 லட்ச ரூபாயில் இருந்து 15 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் மூத்த குடிமக்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்ச வைப்புத் தொகை 15 லட்ச ரூபாயில் இருந்து 30 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.