ETV Bharat / bharat

வரதட்சணையாக பாம்புகள் - சத்தீஷ்கர் மக்களின் விநோத கலாசாரம்!

author img

By

Published : Jul 20, 2023, 11:06 PM IST

Updated : Jul 21, 2023, 6:33 PM IST

Etv Bharat
Etv Bharat

சத்தீஷ்கர் அருகே பழங்குடி மக்கள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

வரதட்சணையாக பாம்புகள் வழங்கும் விநோத கலாசாரம்

கோர்பா - சத்தீஷ்கர்: வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டுக்கு அனுப்பும் கதைகளைப் பார்த்திருப்போம். ஆனால், சத்தீஷ்கரின் இந்த கிராமத்தில் மட்டும் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. கேட்காமலேயே 9 பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கிறார், மாமனார். இதில் 60 பாம்புகளாவது கொடுத்திருக்க வேண்டும் என அங்கலாய்ப்பு ஒருபக்கம்.

வரதட்சணையாக நகை, வாகனம், ஏன் ஆடு, மாடுகளை கூட கொடுப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாம்புகளை சுருட்டி, பையில் போட்டு கொடுத்து அனுப்பும் வழக்கம் சத்தீஷ்கரின் கோர்பா பகுதியைச் சேர்ந்த சன்வாரா பழங்குடியினரிடம் உள்ளது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் பேசுகையில், "அந்த காலத்தில் எல்லாம் 60 பாம்புகளை கொடுப்போம்" என உச்சுக்கொட்டும் அவர், "இப்போ 9 பாம்புதான் கொடுக்கிறோம்'' என கவலைப்படுகிறார். அந்த 9 பாம்புகளும் சாரை பாம்பு, பச்சை பாம்பு, நாகப் பாம்பு, விரியன் என வெரைட்டி காட்ட அவர்கள் தவறுவதில்லை.

பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது எனவும்; திருமணம் முழுமை அடையாது என்பதும் இம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இது ஒருபுறமிருக்க "எங்கள் குழந்தைங்க அழுகுறத நிறுத்தவே பாம்புதான் கொடுப்போம்'' என பயமுறுத்துகிறார், உள்ளூர்வாசி பரத் லால் என்பவர்.

மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வனச்சரக அதிகாரி சியாரம் கர்மாகர் பேசுகையில், "சன்வாரா பழங்குடியினரின் தொழிலே பாம்பு பிடிப்பதுதான்" எனவும், "வரதட்சணை எல்லாம் சரி விஷமற்ற பாம்புகளை கொடுங்கள்" என அவர்களுக்கு தங்களால் முடிந்த ஆலோசனைகளை கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார். திருமணம் செய்யும் ஆண்களே வரதட்சணை கேட்பதெல்லாம் சரி, அதற்கு முன்னால் பெண் வீட்டில் உள்ள பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்வது வரதட்சணை மூட்டையில் பாம்பு இருப்பதை தவிர்க்க உதவும் என கிண்டலடிக்கின்றனர், நெட்டிசன்கள்.

இதையும் படிங்க: Jammu and Kashmir: மலர் பள்ளத்தாக்கு மற்றும் கலைஞர்களின் ஓவியக்காட்சி: குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Last Updated :Jul 21, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.