ETV Bharat / bharat

டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை

author img

By

Published : Aug 19, 2022, 9:29 AM IST

Updated : Aug 19, 2022, 10:12 AM IST

டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை
டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை

டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த கலால் வரிக்கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முன்னதாக டெல்லி லெப்டினெண்ட் ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி அரசின் கலால் வரிக்கொள்கை 2021 -2022, விதிகளை மீறி செயல்பட்டதாக சிபிஐக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ““நம் நாட்டில் நல்ல வேலை செய்பவர்கள் இப்படி துன்புறுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அதனால்தான் நம் நாடு இன்னும் முதல் இடத்திற்கு வரவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த சோதனையில் எதுவும் வெளிவராது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லண்டனில் இருந்து வந்த சாவி.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை!

Last Updated :Aug 19, 2022, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.