ETV Bharat / bharat

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 10:36 AM IST

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

Andhra Bus accident: ஆந்திரப் பிரதேசம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள தொட்டச்சர்லா கிராமத்தின் அருகே தனியார் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

என்டிஆர் (ஆந்திரா): இன்று (ஆகஸ்ட் 25) ஆந்திரப்பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள தொட்டச்சர்லா கிராமத்தின் புறநகர் பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 65இல் வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து கவிழ்ந்து பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.

  • #WATCH | Andhra Pradesh | Around 10 people were injured after a bus overturned on NH65 near Totacharla village of Penuganchiprolu Mandal in the NTR district. The injured were shifted to the hospital: Janardhan, ACP Nandigama.

    (Visuals from accident site) pic.twitter.com/kCxSzrQCvr

    — ANI (@ANI) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஹைதராபாத்தில் இருந்து விஜயநகரம் நோக்கி 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வேகமாகச் சென்றதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை 65இல் கவிழ்ந்து விழுந்தது. இதனால் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், காயமடைந்த 10 பேரும் நந்திகமா மற்றும் விஜயவாடா அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டு உள்ளது. இது குறித்து நந்திகமா ஏசிபி ஜனார்தன் நாயுடு கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே, நந்திகமா ஏ.எஸ்.பி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தவிர்த்து, விபத்தில் காயம் ஏதுமின்றி உயிர் தப்பிய பிற பயணிகள், அவரவர் இடங்களுக்கு செல்வதற்காக நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்தனர். அதைத் தொடர்ந்து, விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஆவின் பொருட்கள் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் - அமைச்சர் மனோ தங்கராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.