ETV Bharat / bharat

இரு அவைகளும் ஒத்திவைப்பு - தொடரும் எதிர்கட்சிகளின் அமளி

author img

By

Published : Jul 20, 2022, 12:14 PM IST

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சில பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Monsoon Parliament Session
Monsoon Parliament Session

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 18) தொடங்கியது. கடந்த இரண்டு நாள்களும் கடும் அமளியால், நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 20) இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின.

புதிதாக சில பொருள்கள் மீது போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் அந்த பொருள்களின் விலை ஏற்றம் அடைந்ததை கண்டித்தும், பணவீக்கம் குறித்தும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். தயிர், பிரெட், பன்னீர் போன்ற பல பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கக்கோரி எதிர்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், திமுக, இடதுசாரி உறுப்பினர்கள் அவையில் கோஷமிட்டனர்.

மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்ட பலரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். பணவீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி, 200 கோடி டோஸ் மைல்கல்: 'வருங்கால தலைமுறை பெருமைப்படும்' - பிரதமர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.