ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி

author img

By

Published : Nov 26, 2022, 5:27 PM IST

குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி
குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி

குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

குஜராத் : டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில்,

நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் எதிர்ப்பு சக்திகளின் அச்சுறுத்தல்களை ஒடுக்கவும், ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து ஒழிக்கவும் பயங்கரவாத எதிர்ப்புக்குழு அமைக்கப்படும்.

குஜராத் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

குஜராத் சீருடை சிவில் கோட் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கென 1 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பணிகள் உருவாக்கப்படும்.

குஜராத்தை நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து உற்பத்தி மையமாக மாற்றி 5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குஜராத்தில் 3,000 கிமீ 4 மற்றும் 6 வழி சாலைகள் (தென்கிழக்கு நெடுஞ்சாலை மற்றும் வடமேற்கு புற நெடுஞ்சாலை) அமைக்கப்படும்.

சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் மூலம் பொருளாதார மையங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இடையே தடையற்ற வழித்தடத்தை உருவாக்குவோம்.

அனைத்து மாணவிகளுக்கும் மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை தரமான கல்வி கட்டணமின்றி வழங்கப்படும்.

அனைத்து பெண்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும்.

குஜராத்தில் உள்ல 56 பழங்குடியினருக்கும் மொபைல் ரேஷன் விநியோகத் திட்டம் மூலம் பொருள்கள் வழங்கப்படும்.

8 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 10 நர்சிங் அல்லது பாரா மெடிக்கல் கல்லூரிகள் உருவாக்கி பழங்குடியின மக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகள் வழங்கப்படும்.

பழங்குடியின இளைஞர்களுக்கு குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகங்கள் (ஜிஐடிசி) மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 75,000 திறமையான மாணவர்களுக்கு 75,000 உண்டு உறைவிட பள்ளிகள் கட்டப்படும்.

குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தியது.

இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்தது தொடரும்.

ரூ.500 கோடி கூடுதல் பட்ஜெட்டில், 1,000 கூடுதல் நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்படும்.

ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும். என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியால் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் 19 இடங்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.