ETV Bharat / bharat

குஜராத் சட்டமன்ற தேர்தல் : வெற்றிக் கனியை நெருங்கும் பா.ஜ.க...!

author img

By

Published : Dec 8, 2022, 1:28 PM IST

குஜராத்
குஜராத்

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஏறத்தாழ தன் வெற்றியை உறுதி செய்து விட்டார்.

அகமதாபாத்: 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு போல் சில தொகுதிகளின் முடிவுகள் இருந்தாலும், பல்வேறு தொகுதிகளில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பா.ஜ.க. முதலைமைச்சர் வெற்றி:

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதலமைச்சர் மற்றும் பா.ஜ.க. தலைவர் புபேந்திர பட்டேல்லின் வெற்றி ஏறக்குறைய உறுதியானதாக கூறப்படுகிறது. காலை 11 மணி நிலவரப்படி, புபேந்திர பட்டேல் 80 புள்ளி 86 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் அமீ யாஜ்நீக் ஓட்டுமொத்த வாக்குகளில் 10 சதவீதம் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் பட்டேல் 4 ஆயிரத்து 167 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விராம்காம் தொகுதியில் விறுவிறுப்பு

பா.ஜ.க. தலைவரும், படிதார் இயக்கத்தின் முகமாகவும் கருதப்படும் ஹர்த்திக் பட்டேல், விராம்காம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 11 மணி நேர நிலவரப்பட்டி 28 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி வேட்பாளர் அனந்திஜி அமர்சிங்ம்18 ஆயிரத்து 867 வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் ஹர்த்திக் பட்டேலை விட 10 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கருதப்பட்ட கம்பாலியா(Khambalia) தொகுதியில் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் இசுதான் காத்வி முன்னிலை வகிக்கிறார். 11 மணி நிலவரப்படி இசுதான் காத்விக் 21 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் அயர் முலுபாய் பேராவை விட ஏறத்தாழ 3 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார். வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் வாக்கு வித்தியாசம் மாறுபடலாம் என கருதப்படுகிறது.

அல்பேஷ் தாகூர்

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டுள்ள பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் அல்பேஷ் தாகூர், பா.ஜ.க. அதிருப்தி அலை வீசிய காந்திநகர் தெற்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 11 மணி நிலவரப்படி 14 ஆயிரத்து 600 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். முதல் முறையாக காந்தி நகர் தொகுதியில் களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தேவேந்திரபாய் 864 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: Live Update: குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.