ETV Bharat / bharat

2024 நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் - பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 10:23 PM IST

Etv Bharat
Etv Bharat

Nitish Kumar about Lok sabha polls: 'INDIA' கூட்டணியைக் கண்டு பாஜக அஞ்சுவதாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திலேயே நடத்தப்படலாம் என்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாளந்தா(பிகார்): எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் காலப்போக்கில் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று பாஜக அஞ்சுவதால், மக்களவைத் தேர்தல் முன்னேற வாய்ப்புள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இதே கூற்றை ஆதரித்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படலாம் என்றுதான் பயப்படுவதாக திங்களன்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைந்துள்ள 'INDIA' கூட்டணி கட்சிகளை கண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்தை ஆதரிப்பதாக பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று (ஆக.29) தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஜனவரியில் இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்று மம்தா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாட்டிற்காக டெல்லி சென்றடைந்தது தமிழகத்தின் நடராஜர் சிலை!

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று (ஆக.29) பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 'நாடெங்கும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் 'INDIA' கூட்டணியினால், தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் மத்தியில் ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணி முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக்கூடும் என்று கடந்த 7 முதல் 8 மாதங்களாக தான் கூறி வருவதாக தெரிவித்துள்ளார். ஆகவே, வரும் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

தங்களின் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும், வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி மும்பையில் நடக்க உள்ள 'INDIA' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர், தங்களது அணி கூடுதல் பலமடையும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் உள்ள நடிகர்கள் உள்ளிட்டோர் குறித்த தரவுகள் எடுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக்காக பாடுபட உள்ளதாகவும், இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதி கணக்கெடுப்பு நடத்துவது பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களாலும் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்தார். 2021இல் முடிக்க வேண்டிய மக்கள் கணக்கெடுப்பு பணியை தாமதிப்பது குறித்து மத்திய அரசுதான் மௌனம் காப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: "நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது" - முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.