ETV Bharat / bharat

டெல்லியில் 'நடமாடும் வெங்காய விற்பனை வாகனம்.'! கிலோ ரூ.24க்கு விற்க கெஜ்ரிவால் உத்தரவு.!

author img

By

Published : Sep 30, 2019, 7:54 AM IST

டெல்லியில் நடமாடும் வெங்காய விற்பனை வண்டியை முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியவைத்து தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள 400 நியாய விலைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.24க்கு விற்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 70 'நடமாடும் வெங்காய விற்பனை வண்டி'களை கொடி அசைத்து அவர் துவங்கி வைத்தார்.

டெல்லியியைப் பொறுத்தமட்டில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் அங்கு வாழும் நடுத்தர மக்களை கவலை கொள்ள செய்துள்ளது. இந்த கவலையை போக்க ஆம் ஆத்மி அரசாங்கம் புதுமுயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.23.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை நேற்று முன்தினம்(28.09.19) அரவிந்த் கெஜ்ரிவால் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்த தகவலை அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ''வெங்காய விலையேற்றத்தை கவனத்தில் கொண்டு 70 நடமாடும் வெங்காய வேன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் டெல்லியில் உள்ள 400 ரேஷன் கடைகளிலும் வெங்காயம் இதே விலைக்கு கிடைக்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்¸ 'வெங்காயம் வேண்டுமா? கண்ணீர் சிந்த வேண்டாம்¸ எளிதாக உங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி செல்லுங்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வட இந்தியாவை பொறுத்தமட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அவர்களின் பிரதான உணவு. இதில் அவர்கள் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்கள்.
கடந்த காலங்களில் வெங்காயம் விலை அதிகரித்ததால்¸ ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டு உள்ளது.

வெங்காய விலையேற்றம் ஆட்சி மாற்றத்தின் அறிகுறி என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெங்காய விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. தொடர்ந்து கொள்முதல் விலை அதிகரிப்பால்¸ சில்லறை விலை மேலும் அதிகரிக்கும் சூழல் தென்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு கையில் எடுத்து உள்ளது.

டெல்லியில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க:

வெங்காயத்தை ஏற்றுமதி செய்யத் தடை!

Intro:Body:

*♦டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பின் படி 1 கிலோ ரூ.24-க்கு வெங்காயம் விற்பனை - ரேஷன் கடைகள் மூலம் வினியோகம்*



https://www.indiatoday.in/india/story/delhi-onions-price-rise-aap-arvind-kejriwal-relief-slash-rates-1603963-2019-09-27



*📌இந்திய மக்களின் சமையலறையில் முக்கிய இடம்பிடித்து வரும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியிலும் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.*



*📌இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் நியாயமான விலையில் வேன்கள் மூலம் 100 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.*



*📌அதன்படி இந்த விற்பனையை நேற்று அவர் தொடங்கி வைத்தார். இதற்காக மாநில தலைமை செயலகத்தின் முன் 70 லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றை கொடியசைத்து கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.*



*📌இந்த வெங்காயம் ரேஷன் கடைகள் மூலமும், வேன்கள் மூலமும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.23.90-க்கு வழங்கப்படும்.* 



*📌இந்த திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 கிலோ வெங்காயம் கிடைக்கும். இந்த வெங்காய விற்பனை மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.*



*📌இந்த வெங்காயம் பெறுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை எனக்கூறிய கெஜ்ரிவால், மக்கள் தங்கள் குடும்ப தேவைக்கு மட்டுமே நேர்மையாக வாங்கி செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.*



*📌இந்த திட்டத்துக்காக நாளொன்றுக்கு 1 லட்சம் கிலோ வெங்காயம், முதல் 5 நாட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வாங்கப்படும் எனவும், பின்னர் தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.*



*📌வெங்காயம் விலை குறையும் வரை டெல்லி அரசின் இந்த நியாயவிலை நடவடிக்கை தொடரும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.*



*📌இந்த திட்டத்தின் நடைமுறையை தமிழகம் உட்பட ஏனைய மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.*



*♦Friends Social Media*


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.