ETV Bharat / bharat

பிரபல கட்டட கலைஞர் சதீஷ் குஜ்ரால் காலமானார்!

author img

By

Published : Mar 27, 2020, 5:20 PM IST

மும்பை: பிரபல கட்டட கலைஞரும் ஓவியருமான சதீஷ் குஜ்ரால் காலமானார். அவருக்கு வயது 94.

Satish Gujral passes away  Satish Gujral dies at 94  Satish Gujral  Satish Gujral no more  பிரபல கட்டட கலைஞர் சதீஷ் குஜ்ரால் காலமானார்!  சதீஷ் குஜ்ரால் மறைவு, பிரதமர் மோடி இரங்கல், ஐ.கே. குஜ்ரால் தம்பி மறைவு  Veteran artist Satish Gujral passes away at 94
Satish Gujral passes away Satish Gujral dies at 94 Satish Gujral Satish Gujral no more பிரபல கட்டட கலைஞர் சதீஷ் குஜ்ரால் காலமானார்! சதீஷ் குஜ்ரால் மறைவு, பிரதமர் மோடி இரங்கல், ஐ.கே. குஜ்ரால் தம்பி மறைவு Veteran artist Satish Gujral passes away at 94

பிரபல ஓவியர், கட்டட கலைஞர் என பன்முக திறமைக்கு சொந்தக்கார் சதீஷ் குஜ்ரால். இவர் தனது 94ஆவது வயதில் நேற்று காலமானார். குஜ்ராலின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சதீஷ் குஜ்ரால் பல்துறை மற்றும் பன்முகத்தன்மை உடையவர். அவர் தனது படைப்பாற்றலுக்காகவும், கடும் துன்பத்திலும் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டிற்காகவும் பாராட்டப்பட்டார்.

அவரது அறிவார்ந்த தாகம் அவரை வெகுதூரம் அழைத்துச் சென்றது. அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.

  • Satish Gujral Ji was versatile and multifaceted. He was admired for his creativity as well as the determination with which he overcame adversity. His intellectual thirst took him far and wide yet he remained attached with his roots. Saddened by his demise. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சதீஷ் குஜ்ரால் 1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தவர். லாகூர் மற்றும் மும்பையில் கலை பயின்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் இந்தியாவில் கலையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரபல கலைஞர்களுள் குஜ்ரால் ஒருவர்.

அவர் ஒரு கட்டடக் கலைஞராகவும் பாராட்டப்பட்டார். டெல்லியில் உள்ள பெல்ஜியம் தூதரகத்தின் கட்டடத்தை வடிவமைத்ததும் குஜ்ரால் தான். சதீஷ் குஜ்ரால் முன்னாள் பிரதமர் குஜ்ராலின் தம்பி ஆவார். குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தற்கால கலைகளின் முன்னோடியை நாம் இழந்து நிற்கிறோம்.

  • Saddened to learn about the demise of eminent painter, artist, sculptor, muralist and one of the pioneers of Contemporary Indian Art, Shri Satish Gujral. The nation will always remember his contributions in the field of art and culture. May his soul rest in peace.

    — Vice President of India (@VPSecretariat) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் சார்ந்த துறையில் அவர் செய்த பங்களிப்புகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். அவரது ஆன்மா அமைதியாக இருக்கட்டும்” என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.