ETV Bharat / bharat

நவராத்திரி முதல் நாளில் படேல் சிலை மீண்டும் திறப்பு!

author img

By

Published : Oct 14, 2020, 1:27 PM IST

சர்தார் வல்லபாய் படேல் சிலை
சர்தார் வல்லபாய் படேல் சிலை

’ஒற்றுமைக்கான சிலை’ எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டும், சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அத்துறையை ஊக்குவிக்கும் விதமாகவும் மீண்டும் திறக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனம் (SSNNL) தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம், கேவடியாவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை, மீண்டும் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு, நாட்டின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை, மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக வருகிற அக்டோபர் 17ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

’ஒற்றுமைக்கான சிலை’ எனப்படும் இந்த படேல் சிலை, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டும், சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அத்துறையை ஊக்குவிக்கும் விதமாகவும் மீண்டும் திறக்க வழிவகை செய்துள்ளதாக சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனம் (SSNNL) தெரிவித்துள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் கேவடியா தளம், ஜங்கிள் சஃபாரி, குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, ஏக்தா கமால் உள்ளிட்ட பிற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் திறக்கப்பட்ட நிலையில், படேல் சிலையைத் திறப்பதற்கான இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடுமையான கரோனா விதிமுறைகளுடன் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கேலரியில் இருந்து பார்ப்பதற்காக நாளொன்றுக்கு 500 பேர் வீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதிச் சீட்டுகள் நேரடியாக விற்பனை செய்யப்படாது என்றும், இரண்டு மணி நேர இடைவெளியில் தினசரி அதிகாரப்பூர்வ தளமான www.soutickets.com எனும் தளத்தில் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகக் கவசங்கள் அணிவது, கைகளை சுத்தமாகப் பராமரிப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை கரோனா நெறிமுறைகளையும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேவடியாவை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : எம்.எல்.ஏ. உள்பட 15 முக்கிய பிரமுகர்கள் நிதிஷ் குமார் கட்சியிலிருந்து விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.