ETV Bharat / bharat

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் 'குவாட்' அமைப்பின் முக்கியத்துவம்!

author img

By

Published : Sep 28, 2020, 9:29 PM IST

Quad
Quad

'குவாட்' அமைப்பின் மூத்த அதிகாரிகள் நடத்திய மெய்நிகர் கூட்டத்தில், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை ஒத்துழைப்பு குறித்து அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக மூத்த நிருபர் சந்திரகலா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: டோக்கியோவில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் இந்தியா, ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம், ஜப்பானின் வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பொது பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஒரு காணொளி கூட்டத்தை வெள்ளிக்கிழமையன்று நடத்தினர்.

பகிரப்பட்ட மதிப்புகள், கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, வெளிப்படையான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் நிலைப்பாட்டை அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சீனாவை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பாக பரவலாகக் கருதப்பட்ட குவாட், கடைசியாக 2019 நவம்பரில் அதிகாரிகள் நிலையிலும், கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர்கள் நிலையிலும் கூடியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற உரையாடல்களை நினைவு கூர்ந்த அதிகாரிகள், தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மற்றும் திட்டமிட்ட நடைமுறை ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று இந்த அமைப்பு குறிப்பிட்டது.

தென்சீனக் கடலில் பிராந்திய உரிமைகோரல்கள் மூலமும், இந்தியப் பெருங்கடலில் முன்னேறுவதற்கான அதன் முயற்சிகள் மூலமும் அடிப்படை விதிகளுக்கு சீனா சவால் விடுத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய-பசிபிக் பகுதி பெரும்பாலும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் உட்பட மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலை உள்ளடக்கிய ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றின் பின்னணியில், விநியோகச் சங்கிலிகளின் பின்னடைவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தொற்றுநோயை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஆலோசனைகளின் போது அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆசியான்-அமைப்பை மையப்படுத்தி, ஆசியான் தலைமையிலான வழிமுறைகளுக்கு, குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்திய கட்டமைப்பில் தலைவர்கள் தலைமையிலான கிழக்கு ஆசியா உச்சிமாநாடு, இந்தோ-பசிபிக் குறித்து ஆசியான் மற்றும் பிற அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கான தயார்நிலை ஆகியவற்றை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.

ஆசியானின் தலைவர் பதவியை வியட்நாமியருக்கு வழங்கியதை அவர்கள் பாராட்டியதோடு இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் 15வது கிழக்காசிய உச்சி மாநாட்டை எதிர்பார்க்கின்றனர். அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைகளை குவாட் அதிகாரிகள் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கிறது.

புது தில்லியுடனான அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான இராஜதந்திர உறவுகள், ஒரு சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விரிவான இந்திய-பசிபிக் பிராந்தியத்தைத் அமைக்க இன்றியமையாதது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த வார தொடக்கத்தில் கூறியது.

இந்தியாவின் கூட்டணி வேகம் மற்றும் நோக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தாலும் அல்லது குவாட் கூட்டாளர்களுடன் இருந்தாலும், இந்தியாவுடனான நமது வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு ஒரு சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விரிவான இந்தோ பசிபிக்கிற்கு முக்கியமானது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைப்பு (SCA) புதன்கிழமையன்று ட்வீட் செய்தது.

ஈடிவி பாரத்-திடம் பேசிய முன்னாள் தூதர் ஜே.கே. திரிபாதி, பிராந்திய விரிவாக்கங்கள் குறித்த சீனாவின் லட்சியங்களை கட்டுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் 'முத்துமாலை' அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கத்தை தடுக்கவும் இந்தியா, அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகியவை சேர்ந்த 'குவாட்' அமைப்பு முயற்சிக்கிறது. ‘முத்துமாலை’யை வடிவமைப்பதன் மூலம் இந்தியாவை பல தளங்களில் சுற்றி வளைப்பதற்காக இந்தோ-பசிபிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களில் சீனா தனது கடற்படையை வைத்திருக்க விரும்புகிறது. அதற்காக இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், தென் சீனாவில் சீனா ஒரு தளத்தை வைத்திருக்க விரும்புகிறது. ஜிபூட்டியில் சீனா ஏற்கனவே ஒரு தளத்தைக் அமைத்துள்ளது. எனவே, இப்பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியில், நான்கு நாடுகளும் மிக முக்கியமான ‘குவாட்’ அமைப்பை உருவாக்கின என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை உருவாக்க சீன முயற்சி செய்யாமலிருந்தால், குவாட் அமைப்பு இத்தகைய நடவடிக்கையைத் தொடங்கியிருக்காது. நிச்சயமாக, குவாட் அமைப்பின் கூட்டம் சீனாவை எதிர்கொள்ள உதவும், ஏனெனில் ஆஸ்திரேலியா ஒரு முக்கியமான இராஜதந்திர நிலையில் உள்ளது, ஜப்பான் சீனாவுடன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரையில், வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இருப்பதாக திரிபாதி மேலும் சுட்டிக்காட்டினார், ஏனெனில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக அமெரிக்கா பசிபிக் பெருங்கடலில் முக்கியமானதாகக் கருதப்படுகிற தனது இராணுவ தளத்தை வூஹானில் வைத்திருப்பதால் இந்தியாவின் செயல்பாடுகள் அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. எனவே, இது இந்திய மற்றும் அமெரிக்காவின் கடல் வர்த்தக வழிகளை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த முயற்சியாகும். குவாட் நாடுகள் பயன்படுத்தும் வர்த்தக பாதைகளை தடுக்கவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கும் சீனாவின் திட்டத்தை தடுக்க இது உதவும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.