ETV Bharat / bharat

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்!

author img

By

Published : Dec 14, 2019, 10:46 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry University
puducherry University

இது தொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

puducherry University
Puducherry University

பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்பிகள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:புதுச்சேரி பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
Body:புதுச்சேரி பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.



புதுச்சேரி பல்கலைகழகத்தில் 27 வது பட்டமளிப்பு விழா வரும் 23ம் தேதி மதியம் 12 .40 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜவர்கலால் நேரு ஆடிட்டோரியத்தில் நடக்கிறது விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் முதல்வர் நாராயணசாமி. அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்பிகள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என இத்தகவலை பல்கலைக்கழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:புதுச்சேரி பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.