உ.பி.யில் மக்களுக்கு பாதுகாப்பில்லை - சாடும் பிரியங்கா காந்தி

author img

By

Published : Oct 26, 2020, 5:12 PM IST

Priyanka slams Yogi govt over law and order; says fear prevailing among people

உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், வணிகர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் இரும்பு விற்பனை செய்யும் நபர் ஒருவர் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். மேலும், அவரை விடுவிக்க வேண்டுமெனில் ஒரு கோடி ரூபாய் அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பாக்பத்தில் இன்று இரும்பு விற்பனையாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. வணிகர்களுக்கும் பாதுகாப்பில்லை.

Priyanka slams Yogi govt over law and order; says fear prevailing among people
பிரியங்கா காந்தி ட்வீட்

இந்த அரசாங்கம் தேர்தல் நேரத்தில் வெற்று அறிவிப்புகளை மட்டும்தான் வெளியிட்டுவருகிறது. மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்றுவருகிறது என தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.