ETV Bharat / bharat

'ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த வலியுறுத்துவேன்' - புதுச்சேரி பாஜக தலைவர்

author img

By

Published : Jan 29, 2020, 10:54 AM IST

புதுச்சேரி: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் என்று பாஜக மாநிலத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக அலுவலகம்
புதுச்சேரி பாஜக அலுவலகம்

புதுச்சேரி பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,

"உலக வங்கி அளித்துள்ள நிதியிலிருந்து, புதுச்சேரி பழைய மேரி கட்டடம், தேங்காய்த்திட்டு துறைமுக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், காரைக்கால் மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற புதுச்சேரி அரசு ரூபாய் 250 கோடிக்கு மேல் நிதி பெற்றது. ஆனால் இத்திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியாமல் ஊழல் நடந்துள்ளது.

இந்நிலையில் உலக வங்கி அலுவலர்கள் இன்று (ஜன 29) புதுச்சேரி வரவுள்ளதாகத் தெரிகிறது. அவர்களைச் சந்திக்கும்போது புதுச்சேரி மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள் கிடப்பில் உள்ளன. எனவே காலக்கெடுவை மார்ச் 2020-க்கு மேல் நீட்டித்து தர வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் எனவும், உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து இத்திட்டத்தில் உள்ள தகுதியற்ற அலுவலர்களை உடனடியாக மாற்றிவிட்டு நல்ல திறமையான அலுவலர்களை நியமித்து பணியை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கவுள்ளேன்" என்றார்.

புதுச்சேரி பாஜக அலுவலகம்

மேலும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் எனச் சொன்ன அவர், தற்போது காங்கிரஸ் ஆட்சியில் வரலாறு காணாத அளவில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே ஊழல் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Intro:புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் என்று பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்


Body:புதுச்சேரி பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ,

புதுச்சேரியில் ரூபாய் 250 கோடிக்கு மேல் மாநில அரசு உலக வங்கி அளித்துள்ள நிதியில் இருந்து புதுச்சேரி பழைய மேரி கட்டிடம் .தேங்காய்த்திட்டு துறைமுக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ,காரைக்கால் மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிதி பெற்றது ஆனால் இத்திட்டங்கள் குறிப்பிட்ட கால கெடுக்கு முடிவு பெறாமலும் ஊழல் நடந்துள்ளது மேலும் திட்டங்கள் செயலற்ற தன்மையும் காரணமாக இருப்பதால்,

வருகின்ற 29 ஆம் தேதி உலக வங்கி அதிகாரிகள் புதுவை வருகை புரிய உள்ளதாக தெரிகிறது அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புதுச்சேரி மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் கிடப்பில் உள்ளது. கணக்கில்கொண்டு காலக்கெடுவை மார்ச் 2020 க்கு மேல் நீடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளேன் என்று கூறிய அவர்

மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் என்றும் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து புதுச்சேரியில் இந்த திட்டத்தில் உள்ள தகுதியற்ற அதிகாரிகளை உடனடியாக மாற்றிவிட்டு நல்ல திறமையான அதிகாரிகளை நியமித்து பணியை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் என்றும் கூறிய சுவாமிநாதன் எம்எல்ஏ .காங்கிரஸ் ஆட்சியில் வரலாறு காணாத அளவில் ஊழல் அதிகரித்துள்ளது புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே ஊழல் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் உடன் இருந்தனர்


Conclusion:புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் என்று பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.