ETV Bharat / bharat

"தவறுக்கு தண்டனை, உடல் உறுப்புகளுக்கு அல்ல" நிர்பயா வழக்கில் புதிய மனு!

author img

By

Published : Feb 22, 2020, 11:17 PM IST

SUPREME COURT  PIL  Nirbhaya rape convicts  organ donation  Bombay High Court Justice Michael F Saldanha  Karnataka-based advocate  'தவறுக்கு தண்டனை, உடல் உறுப்புகளுக்கு அல்ல'- நிர்பயா வழக்கில் புதிய மனு  பொதுநல வழக்கு, டெல்லி உச்ச நீதிமன்றம், நிர்பயா கொலை கைதிகள், நீதிபதி மைக்கேல் எஃப் சல்தான்ஹா,  PIL filed in SC seeking Nirbhaya rape convicts be given option to donate organs
PIL filed in SC seeking Nirbhaya rape convicts be given option to donate organs

டெல்லி: நிர்பயா கொலை கைதிகள் தூக்கிலிடப்பட்டு, அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றும்பட்சத்தில் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க வழிகாட்ட வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மைக்கேல் எஃப் சல்தான்ஹா, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டு வழக்குரைஞர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை, அவர்கள் செய்துள்ள தவறுக்கான தண்டனை. ஆனால் அவர்களின் உறுப்புகளை தானம் செய்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், தவறுகளைச் சரிசெய்ய ஒரு சீர்திருத்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முடியும்.

ஏனெனில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒருவருக்கு இது வாழ்வளிக்கும். மேலும் உறுப்பு தானம் என்பது மனச்சோர்வுக்கான இறுதி வாய்ப்பாகவும், மற்றொரு மனிதனின் வாழ்க்கையை ஒரு மறைமுக வழியில் புதுப்பிக்கவும் உதவியாகவும் இருக்கும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, வெளிநாடுகளான சிங்கப்பூர், பெல்ஜியம், ஸ்பெயின் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட உறுப்பு தானக் கொள்கைகளையும், மனுதாரர்கள் எடுத்துக்காட்டுகளாக மேற்கோள் காட்டியுள்ளனர்.

மேலும் நமது நாட்டில் இத்தகைய உறுப்பு தானம் குறித்த கொள்கைகள் வகுக்கப்படாததால், ஏராளமான இறப்புகள் ஏற்படக்கூடும் என்றும் மனுதாரர்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்தான்ஹா நீதிபதியாக இருந்த காலத்தில், குற்றவாளி ஒருவரின் உடல்களை தானமாக வழங்க உத்தரவிட்டார்.

ஏனெனில் அந்தக் குற்றவாளி தான் செய்த குற்றத்துக்கு வருத்தப்பட்டார். மரண தண்டனையை எதிர்த்து முறையிடவில்லை. மாறாக தனது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க விரும்பினார். இதனால் அவரது உடல் பாதுகாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆறு மாதத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.