ETV Bharat / bharat

சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் சி. காஷ்யப்

author img

By

Published : Jan 24, 2020, 4:46 PM IST

Subash
Subash

சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் சி. காஷ்யப் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், அரசியலமைப்பு தினம் (தேசிய சட்ட தினம்) இந்தியாவில் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் ஏற்றுகொள்ளப்பட்டது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்தாண்டுடன் 70 ஆண்டுகள் ஆகின்றன. இதனிடையே, அரசியலமைப்பு நிபுணரும் முன்னாள் மக்களவை பொதுச்செயலாளருமான சுபாஷ் சி. காஷ்யப், நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அந்த கேள்வி, பதில் தொகுப்பு இதோ...

கேள்வி: நமது அரசியலமைப்பின் 70 நீண்ட ஆண்டுகளை நாம் நிறைவு செய்துள்ளோம், நீங்கள் பல அனுபவங்களை கடந்து வந்துள்ளீர்கள். இதுவரை இந்தியாவின் பயணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுபாஷ் சி. காஷ்யப்: நமது அரசியலமைப்பு ஒரு சிறந்த மற்றும் தனித்துவமான சாசனமாக இருப்பதன் காரணம் சிறந்த மனங்கள் ஒன்றிணைந்து, நமது தேசத்தின் எதிர்காலத்தையும் ஆர்வத்தையும் திட்டமிட்டதாகும். இந்திய குடியரசை உருவாக்கிய தலைவர்கள், தேசபக்தர்கள் மற்றும் அறிஞர்கள் இந்திய அரசியலமைப்பை மூன்று ஆண்டுகளுக்குள் உருவாக்கினர் - இது ஒரு பெரிய சாதனை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிற அரசியலமைப்புகளில் சிலதை ரத்து செய்த அல்லது மாற்றியது போலல்லாமல், நமது அரசியலமைப்பும் காலத்தின் சோதனையை கடந்து, அது தன்னை தேசிய ஒருங்கிணைப்பின் சக்தியாக நிரூபித்தது. நமது அரசியலமைப்பில் பல்வேறு கூறுகள் உள்ளன, அவை அரசியலமைப்பு பற்றிய அறியாமை காரணமாக பல முறை கவனிக்கப்படாமல் உள்ளன. நாம் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் உரிமைகளை கோருகிறோம், ஆனால் நாம் நமது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம்.

கேள்வி: காலப்போக்கில் நமது அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நேரத்தில் திருத்தங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுபாஷ் சி. காஷ்யப்: ஒரு அரசியலமைப்பு இயற்கையில் மிகவும் கடினமானதாக இருக்கக்கூடாது. மேலும் மறுபரிசீலனை, திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும், அவை காலத்தின் தேவைகளுடன் ஒத்துப்போகின்றன

இந்திய அரசியலமைப்பின் பகுதி XX (பிரிவு 368) இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான நடைமுறைகளின்படி இந்திய அரசியலமைப்பு அவ்வப்போது திருத்தப்பட்டுவருகிறது. 1950 முதல் மொத்தம் 103 திருத்தங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் விவாதிக்கப்பட்ட 370ஆவது பிரிவு பற்றி பேசும்போது, அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை, ஏனெனில் அந்த பிரிவில் 'தானாக மறையும்' ஏற்பாடுகள் இருந்தன. அந்த பிரிவு ரத்து செய்யப்படவில்லை, ஆனால் மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி: நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் மற்றும் சிந்தனைகளில் ஈடுபடாமல், அவசர அவசரமாக மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கும் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்துவருகிறது. சமீபத்திய CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன், நமது அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது என்ற கூற்றுகள் நாடு முழுவதும் ஒலிக்கின்றன. இந்த அண்மை கால செயல்பாடுகளை பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

சுபாஷ் சி. காஷ்யப்: இப்போது நம் நாட்டில் தற்போது நடக்கும் விஷயங்கள் நமது அரசியலமைப்பைவிட அரசியலுடன் அதிகம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது அரசியலமைப்பு எல்லாவற்றையும் தெளிவாகக் கூறியுள்ளபடி அரசியல் ஆதாயங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசியலமைப்பு நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது இதுபோன்ற வேற்றுமை ஏற்படாது. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அதிகாரங்கள் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த அதிகாரங்கள் யூனியன் மாநிலம் மற்றும் ஒரே நேரத்தில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களால், மத்திய அரசு தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது, ஒவ்வொரு அரசியல் கட்சியையும் இந்த 'எதிர்ப்பு' கலாசாரத்திற்கு குற்றம்சாட்ட வேண்டும்.

கேள்வி: CAA-ஐ எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையா அல்லது பொதுமக்கள் மத்தியில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததா?

சுபாஷ் சி. காஷ்யப்: இதற்கு குறைந்த விழிப்புணர்வு மற்றும் அறியாமை காரணமாகும். மக்கள் தங்கள் கிளர்ச்சியை வன்முறை வழியில் காட்டுகிறார்கள், இந்த செயல்பாட்டில் பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள். மக்கள் தங்கள் அதிருப்தியைக் காட்டும் அதே வேளையில் அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி: CAAஇன் அரசியலமைப்பு நிலையை காரணம் காட்டி பல மாநிலங்கள் இதனை செயல்படுத்த மறுத்துவிட்டன. அவர்களின் எதிர்ப்புகள் நியாயமானதா?

சுபாஷ் சி. காஷ்யப்: இந்தச் சட்டம் குடியுரிமையைப் பறிக்காது என்றும் நமது பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளனர். குடியுரிமை தொடர்பான விதிகள் யூனியன் பட்டியல் அல்லது பட்டியல்-1இன் கீழ் வருகின்றன என்றும், அது குறித்து சட்டமியற்ற மாநிலங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றும் நமது அரசியலமைப்பு தெளிவாகக் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒற்றை குடியுரிமை என்ற கருத்தை இந்தியா கொண்டுள்ளது. இப்போது சட்டம் இயற்றப்பட்ட பிறகு, சட்டத்தை எதிர்க்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு விவாதம் நடத்தி தேவையான திருத்தங்களைச் செய்வது, இரண்டாவது வழி உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்த்து முறையீடு செய்வது. எதிர்ப்பு ஒரு தனிநபரின் உரிமை என்றாலும், தமது போராட்டத்தை காட்ட பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது.

கேள்வி : குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பான உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறவும்

சுபாஷ் சி. காஷ்யப்: நான் முன்பு கூறியதுபோல், திருத்தப்பட்ட சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். இதில் சில சமூகங்களை குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சைக்குரியதாகிவிட்டது, அவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் யார் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள், யார் தகுதி இல்லாதவர்கள் என்பதை தீர்மானிக்கும் இறையாண்மை ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது.

Intro:Body:

அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்அரசியலமைப்பு தினம் (தேசிய சட்ட தினம்) இந்தியாவில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது,



இந்த ஆண்டு1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இந்தியா 70வது ஆண்டு அரசியலமைப்பை கொண்டாடுகிறது 





இந்த  சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு நிபுணரும் 7வது மக்களவை8வது மக்களவை மற்றும் 9வது மக்களவை ஆகியவற்றின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்தவருமான  சுபாஷ் சி. காஷ்யப் உடன்ஈடிவி பாரத் கலந்துரையாடல் நடத்தியது.



நேர்காணலின் பகுதிகள் கீழே:



கேள்வி 1: நமது  அரசியலமைப்பின் 70 நீண்ட ஆண்டுகளை நாம் நிறைவு செய்துள்ளோம்நீங்கள் பல அனுபவங்களை கடந்து வந்துள்ளீர்கள். இதுவரை இந்தியாவின் பயணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?





சுபாஷ் சி. காஷ்யப்- நமது அரசியலமைப்பு ஒரு சிறந்த மற்றும் தனித்துவமான சாசனமாக இருப்பதன்  காரணம்  சிறந்த மனங்கள் ஒன்றிணைந்துநமது தேசத்தின் எதிர்காலத்தையும் ஆர்வத்தையும்  திட்டமிட்டதாகும். இந்திய குடியரசை உருவாக்கிய  தலைவர்கள்தேசபக்தர்கள் மற்றும் அறிஞர்கள் இந்திய  அரசியலமைப்பை மூன்று ஆண்டுகளுக்குள் உருவாக்கினர்  - இது ஒரு பெரிய சாதனை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிற அரசியலமைப்புகளில் சில  ரத்து செய்த  அல்லது மாற்றியது போலல்லாமல்நமது அரசியலமைப்பும் காலத்தின் சோதனையை கடந்துஅது தன்னை தேசிய ஒருங்கிணைப்பின் சக்தியாக நிரூபித்தது. நமது அரசியலமைப்பில் பல்வேறு கூறுகள் உள்ளனஅவை அரசியலமைப்பு பற்றிய அறியாமை காரணமாக பல முறை கவனிக்கப்படாமல் உள்ளன. நாம் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் உரிமைகளை கோருகிறோம்ஆனால் நாம் நமது  கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம்.





கேள்வி 2: காலப்போக்கில் நமது அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய  நேரத்தில் திருத்தங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?   





சுபாஷ் சி. காஷ்யப்- ஒரு அரசியலமைப்பு இயற்கையில் மிகவும் கடினமானதாக இருக்கக்கூடாதுமேலும் மறுபரிசீலனைதிருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்அவை காலத்தின் தேவைகளுடன் ஒத்துப்போகின்றன 



இந்திய அரசியலமைப்பின் பகுதி XX (பிரிவு 368) இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான நடைமுறைகளின்படி இந்திய அரசியலமைப்பு அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. 1950 முதல் மொத்தம் 103 திருத்தங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் விவாதிக்கப்பட்ட 370 வது பிரிவு பற்றி பேசும்போதுஅரசியலமைப்பு திருத்தம் தேவையில்லைஏனெனில் அந்தக் பிரிவில்  'தானாக மறையும்ஏற்பாடுகள் இருந்தன. அந்த பிரிவு  ரத்து செய்யப்படவில்லைஆனால் மாற்றப்பட்டுள்ளது.   





கேள்வி 3: பாராளுமன்றத்தில் முறையான விவாதங்கள் மற்றும் சிந்தனைகளில் ஈடுபடாமல்அவசர அவசரமாக மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கும் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள்  அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது. சமீபத்திய CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன்நமது அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது என்ற கூற்றுக்கள் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த அண்மைகால செயல்பாடுகளை பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? 





சுபாஷ் சி. காஷ்யப்- இப்போது நம் நாட்டில் தற்போது நடக்கும் விஷயங்கள் நமது  அரசியலமைப்பை விட அரசியலுடன் அதிகம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது அரசியலமைப்பு எல்லாவற்றையும் தெளிவாகக் கூறியுள்ளபடி அரசியல் ஆதாயங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுஅரசியலமைப்பு நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படும் போது இதுபோன்ற வேற்றுமை ஏற்படாது.மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அதிகாரங்கள்  அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதுமேலும் இந்த அதிகாரங்கள் யூனியன் மாநிலம் மற்றும் ஒரே நேரத்தில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களால்மத்திய அரசு தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறதுஒவ்வொரு அரசியல் கட்சியையும் இந்த 'எதிர்ப்புகலாச்சாரத்திற்கு குற்றம் சாட்ட வேண்டும்.





கேள்வி 4. CAA ஐ எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள்.. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையா அல்லது பொதுமக்கள்  மத்தியில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததா?





சுபாஷ் சி. காஷ்யப்- இதற்கு குறைந்த விழிப்புணர்வு மற்றும் அறியாமை காரணமாகும். மக்கள் தங்கள் கிளர்ச்சியை வன்முறை வழியில் காட்டுகிறார்கள்இந்த செயல்பாட்டில் பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள். மக்கள் தங்கள் அதிருப்தியைக் காட்டும் அதே வேளையில் அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது.





கேள்வி 5CAA இன் அரசியலமைப்பு நிலையை காரணம் காட்டி பல மாநிலங்கள்  இதனை செயல்படுத்த மறுத்துவிட்டன. அவர்களின் எதிர்ப்புக்கள் நியாயமானதா?





சுபாஷ் சி. காஷ்யப்- இந்தச் சட்டம் வழங்கும் என்றும் குடியுரிமையைப் பறிக்காது என்றும் நமது பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். குடியுரிமை தொடர்பான விதிகள் யூனியன் பட்டியல் அல்லது பட்டியல் -1 இன் கீழ் வருகின்றன என்றும்அது குறித்து சட்டமியற்ற மாநிலங்களுக்கு தனிப்பட்ட  அதிகாரம் இல்லை என்றும் நமது  அரசியலமைப்பு தெளிவாகக் கூறியுள்ளது. பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒற்றை குடியுரிமை என்ற கருத்தை இந்தியா கொண்டுள்ளது. இப்போது சட்டம் இயற்றப்பட்ட பிறகுசட்டத்தை எதிர்க்க  இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு விவாதம் நடத்தி தேவையான திருத்தங்களைச் செய்வது, இரண்டாவது வழி உச்சநீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்த்து முறையீடு செய்வது. எதிர்ப்பு ஒரு தனிநபரின் உரிமை என்றாலும்தமது போராட்டத்தை  காட்ட பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை  நியாயப்படுத்த முடியாது.





கேள்வி 6: குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பான உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறவும்





சுபாஷ் சி. காஷ்யப்- நான் முன்பு கூறியது போல்திருத்தப்பட்ட சட்டம் பாகிஸ்தான்பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும்.   இதில்  சில சமூகங்களை குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சைக்குரியதாகிவிட்டதுஅவை தவிர்க்கப்பட்டிருக்கலாம் இருப்பினும்எந்த மதத்தை பொருட்படுத்தாமல் யார் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள்யார் தகுதி இல்லாதவர்கள் என்பதை தீர்மானிக்கும் இறையாண்மை ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது



word count 567


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.